இலங்கைதலைப்புச் செய்திகள்

நீர்வீழ்ச்சியில் தவறி விழுந்த மணமகன் சடலமாக மீட்பு

திருமணத்துக்கு முன்னரான புகைப்படம் எடுப்பதற்காக லக்கல பிரதேசத்திலுள்ள நக்கள்ஸ் வனப்பகுதியில் அமைந்துள்ள சேரஎல்ல நீர்வீழ்ச்சிக்குச் சென்று, தவறி விழுந்து காணாமல் போன மணமகன் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

கடற்படையின் சுழியோடிப் பிரிவால், காணாமல் போனவரின் சடலம் இன்று (29) கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக லக்கல பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இருவரும் தவறி விழுந்துள்ள நிலையில், அருகிலிருந்தவர்களால் மணப்பெண் காப்பாற்றப்பட்டுள்ளா்.

எனினும், குருநாகல் பிரதேசத்தைச் சேர்ந்த 27 வயதுடைய மணமகன் இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

குறித்த ஜோடி குருநாகல் பிரதேசத்திலிருந்து, திருமணத்துக்கு முன்னர் புகைப்படம் எடுப்பதற்காக லக்கல பிரதேசத்துக்கு வருகைத் தந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

செய்திகளை உடனுக்குடன் TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்… https://t.me/colombotamil

Get all the Latest Sir Lanka Tamil News and Tamil World News at Colombo Tamil. You can also catch all the latest Tamil Entertainment News by following us on Twitter and Facebook. also Download Our News App in Google Play Store.

Tags
Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
x
Close
Close