Mon, Jan18, 2021

மேஷம்

ரிஷபம்

மிதுனம்

கடகம்

சிம்மம்

கன்னி

துலாம்

விருச்சிகம்

தனுசு

மகரம்

கும்பம்

மீனம்

இதையும் படிங்க

நீதிமன்றத்தின் சுதந்திரத்தை உறுதிப்படுத்தும் பொறுப்பு அரசாங்கத்திற்கு வழங்கப்பட்டுள்ளது

நீதிமன்றம் மீதான நம்பிக்கை குறைந்திருப்பதைத் தொடர்ந்து, நாட்டில் மோசமான நிலை உருவாகி வருகின்றது என்று பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

நீதிமன்றத்தின் சுதந்திரத்தை உறுதிப்படுத்தும் பொறுப்பு தற்போதைய அரசாங்கத்திற்கு வழங்கப்பட்டுள்ளதாக பிரதமர் குறிப்பிட்டார்.

அரசியல் மற்றும் சமூக பிரச்சினைகளை விவாதித்து முடிவுக்கு வரக்கூடிய பாராளுமன்றம் ஒன்றை மீண்டும் கட்டியெழுப்ப அரசாங்கம் தயாரென பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

அலரிமாளிகையில் நேற்று காலை செய்தியாளர்களைச் சந்தித்த போது பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இந்த விடயங்களை குறிப்பிட்டார்.

நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவின் ஒலி இறுவட்டு மூலம் வெளியிடப்பட்டுள்ள விடயங்கள் நீதிமன்றத்தின் சுயாதீனத் தன்மைக்கு பெரும் பாதிப்பு ஏற்படுத்தியுள்ளது.

எனவே ஜனாதிபதி ஆணைக்குழுவொன்றை அமைத்து அது தொடர்பில் ஆராய வேண்டியுள்ளது என்றும் பிரதமர் தெரிவித்தார்.

நீங்களும் ரஞ்சனுடன் பேசினீர்களா? என்ற கேள்விக்கு பிரதமர் பதிலளிக்கையில் , எனது அதிர்ஷ்டம் நான் பேசவில்லை. பிறந்த தினத்தன்று வாழ்த்து தெரிவிப்பது மட்டுமே இடம்பெற்றது.
தவறுதலாக நானும் பேசியிருந்தால் நிச்சயமாக அதனையும் வெளியே விட்டிருப்பார். கடவுள் புண்ணியத்தில் நான் தப்பிவிட்டேன் என்றார்.

சர்ச்சைக்குரிய குரல் பதிவுகள் வெளியாகியுள்ளதால் கடந்த ஆட்சியில் இருந்த அரசியல்வாதிகள் நீதிமன்றத்திற்கு எந்தளவு அழுத்தம் கொடுத்திருக்கின்றார்கள் என்பது தெளிவாவதாக அவர் சுட்டிக்காட்டினார்.

அரிசி விலை தொடர்பில் கருத்து வெளியிட்ட அவர், நெல் சந்தைப்படுத்தல் சபையை உடனடியாகப் பலப்படுத்தி, நெல்லைக் கொள்வனவு செய்யும் வேலைத்திட்டம் மேற்கொள்ளப்பட்டு வருவதாகக் குறிப்பிட்டார்.

எதிர்வரும் பொதுத் தேர்தலை பழைய முறையின் கீழ் நடத்தி புதிய அரசாங்கத்தின் கீழ், நாடாளுமன்றத்தில் திருத்தத்தைக் கொண்டுவருவதாகவும் இதன் போது தினேஷ் குணவர்த்தனவின் சட்டமூலத்தை ஆராய்ந்து மிகவும் சிறந்த அரசியலமைப்புத் திருத்தமொன்றைக் கொண்டுவர எதிர்பார்ப்பதாகவும் பிரதமர் குறிப்பிட்டார்.

மேற்படி விடயம் அரசியல் பழிவாங்கலுக்காக இடம்பெற்றதொன்றல்ல. இது நீதிமன்றத்தின் சுயாதீனத் தன்மைக்கு மேற்கொள்ளப்பட்ட அழுத்தமாக கருதமுடியும் என கல்வி அமைச்சர் டளஸ் அழகப்பெரும இங்கு தெரிவித்தார்.

எதிர்க் கட்சியை ஒழிப்பதற்கு மேற்கொள்ளப்பட்ட திட்டமிடப்பட்ட செயற்பாடாகும் என இராஜாங்க அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே குறிப்பிட்டார்.

கேள்வி: இந்த விடயங்கள் பெரும் பிரச்சினையை தோற்றுவித்துள்ளன. இதிலிருந்து விடுபடுவது எவ்வாறு?

இதற்கு பதிலலித்த பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில கீழ்மட்டத்தில் உள்ள நீதிமன்றங்களின் விழுமியங்களுக்கு பொறுப்பு நீதிச்சேவை ஆணைக்குழுவிடமே உள்ளது. மேல், உயர் நீதிமன்றங்கள் தொடர்பில் செயற்பட வேண்டியது நாடாளுமன்றமே.

இங்கு நாம் நிறைவேற்று அதிகாரம், சட்டவாக்கம் இரண்டுக்குமிடையில் மோதல் ஏற்படுவதை விட பிரதம நீதியரசர் இதில் தலையிட்டு விபரங்களை அறிந்து சிபாரிசுகளை நாடாளுமன்றத்துக்கு பெற்றுத் தந்தால் நாடாளுமன்றம் அதனடிப்படையில் செயற்பட முடியும் என்றார்.

அமைச்சர் பந்துல குணவர்தன குறிப்பிடுகையில் ஜே.வி.பி. யினர் நிறைவேற்றுப் பிரச்சினையொன்றை செய்து அதன் மூலம் எட்டப்பட்ட குரோத்தனமான தீர்ப்புகள் தான் கீழ்மட்டம் வரை கசிந்துள்ளன.

அதில் அன்று அநுரகுமார திசாநாயக்க இருந்தார். இப்போது வசந்த சமரசிங்க சொல்கிறார் நாட்டு பிரச்சினைகள் குறித்துப் பேசுவதில்லை என்பதாக குறிப்பிடுகின்றனர். ஆனால் இதே ஜே.வி.பியினர் தான் ராஜபக்ஷக்கள் உட்பட அனைவருக்கும் எதிரான நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு வழங்கினர்.

தொலைபேசி உரையாடல் ஒலிப்பதிவுத் தொடர்பாக அமைச்சர் டலஸ் அழகப்பெரும நாடாளுமன்றத்தில் பேசினார். இலங்கையில் இதன் நிலைமை என்ன என்ற கேள்விக்கு அமைச்சர் டலஸ் அழகப் பெரும பதில் அளித்தார் தொலைபேசி உரையாடல்கள் அனுமதியின்றி ஒலிப்பதிவு செய்வது பெரும் குற்றமாகும். என்றார்.

அரசாங்க தகவல் திணைக்களம்

தொடர்புச் செய்திகள்

ஆசிரியரிடமிருந்து மேலும் பதிவுகள்

மேலும் பதிவுகள்

பிந்திய செய்திகள்