நீண்ட நாள் கனவு நிறைவேறியது... ப்ரியா பவானி சங்கர் நெகிழ்ச்சி

செய்தி வாசிப்பாளராக பயணத்தை தொடங்கி அதன் பின்னர் சீரியலில் நாயகி ஆக நடித்து மேயாதமான் என்ற படத்தின் மூலம் வெள்ளி திரையில் நாயகியாக அறிமுகமானவர் பிரியா பவானி சங்கர்.

முதல் படத்தில் ரசிகர்களை கவர்ந்த இவர் தற்போது பல்வேறு படங்களில் பல மொழிகளில் நடித்து வருகிறார். உலகநாயகன் கமல்ஹாசன் நடிப்பில் உருவாகி வரும் இந்தியன் 2 திரைப்படத்தில் கூட ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

இப்படி தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகையாக இடம் பிடித்துள்ள பிரியா பவானி சங்கர் எப்போதும் சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வருகிறார். 

இந்நிலையில் அவர் வெளியிட்டுள்ள நெகிழ்ச்சியான பதிவு ஒன்று வைரலாகி வருகிறது. அதில் அவர், “18 வயதில் ஆசைப்பட்டு தற்போது நமது புதிய வீட்டில் அடியெடுத்து வைக்கப் போகிறோம்” என தனது புது வீடு பற்றி தனது காதலனுடன் இருக்கும் புகைப்படங்களை இணைத்து நெகிழ்ச்சியுடன் பதிவிட்டு இருக்கிறார். இதற்கு பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.