பயங்கரவாதத் தடுப்புப் பிரிவின் முன்னாள் பணிப்பாளரான பிரதிப் பொலிஸ்மா அதிபர் நாலக டி சில்வாவின் பிணை
கோரிக்கை நிராகரிக்கப்பட்டுள்ளது.
குறித்த பிணை கோரிக்கை, கொழும்பு மேல் நீதிமன்றில் இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
இதன்போது, நாலக டி சில்வாவின் பிணை கோரிக்கையை நிராகரிப்பதாக கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி மஞ்சுள திலக்கரத்ன அறிவித்துள்ளார்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ ஆகியோரின் படுகொலை சதித்திட்டம் தொடர்பில்
சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்டுள்ள பயங்கரவாதத் தடுப்புப் பிரிவின் முன்னாள் பணிப்பாளரான பிரதிப் பொலிஸ்மா அதிபர் நாலக டி சில்வா தொடர்ந்து விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
இந்த நிலையில், தமக்கு பிணை வழங்குமாறு பயங்கரவாதத் தடுப்புப் பிரிவின் முன்னாள் பணிப்பாளரான பிரதிப் பொலிஸ்மா அதிபர் நாலக டி சில்வா, கொழும்பு மேல் நீதிமன்றில் தமது சட்டத்தரணிகள் ஊடாக மனுதாக்கல் செய்திருந்தார்.
குறித்த மனுவே கொழும்பு மேல் நீதிமன்றில் இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
பிரதிவாதியின் பிணை கோரிக்கையை நிராகரித்த கொழும்பு நீதவான் நீதிமன்றில் உத்தரவு சட்டவிரோதமானது என, சந்தேக நபரான நாலக டி சில்வா தரப்பில் மன்றில் முன்னிலையான சட்டதரணி, தெரிவித்துள்ளார்.
வழக்கு விசாரணைகள் நிறைவடையும் வரை சந்தேக நபரை விளக்கமறியலில் வைப்பதற்கு நீதவானுக்கு அதிகாரம் உள்ளதாக தெரிவித்த நீதிபதி மஞ்சுள திலக்கரத்ன, பிணை கோரிக்கையை கொழும்பு நீதவான் நிராகரிக்க எடுத்த தீர்மானத்தில் தவறு இல்லையென்றும் குறிப்பிட்டுள்ளார்.
2018 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 25 ஆம் திகதி வாக்குமூலம் வழங்குவதற்காக குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முன்னிலையாகிய நிலையிலேயே பிரதிப்
பொலிஸ்மா அதிபர் நாலக டி சில்வா கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Website – www.colombotamil.lk
Facebook – http://www.facebook.com/TheColomboTamil
Twitter – www.twitter.com/TheColomboTamil
Instagram – www.instagram.com/TheColomboTamil
Contact us – info@colombotamil.lk
#SriLankaNews, #SriLankanNews, #LankaNews, #Lanka, #Tamil, #SriLanka, #ColomboNews