நாமினேஷனுக்கு தேர்வான 4 போட்டியாளர்கள்.. பரபரப்பான முதல் ப்ரொமோ

பிக் பாஸ் நான்காவது சீசன் முதல் நாளில் இருந்தே மிகவும் பரபரப்பாக இருந்து வருகிறது. முந்தைய சீசன்கள் போல இல்லாமல் இந்த முறை போட்டியாளர்கள் நடுவில் முதல் நாளிலிருந்தே சண்டை துவங்கி இருக்கிறது.

அது மட்டுமின்றி போட்டியாளர்கள் நடுவில் கருத்து வேறுபாடும் அதிகம் ஏற்பட்டு வருகிறது. அதற்கு நேற்று அனிதா சம்பத் மற்றும் சுரேஷ் சக்ரவர்த்தி ஆகியோர் இடையே நடந்த பெரிய வாக்குவாதம் ஒரு உதாரணம்.

அது மட்டுமன்றி நேற்று போட்டியாளர்களுக்கு ‘கடந்து வந்த பாதை’ என்ற டாஸ்க் கொடுக்கப்பட்டது. அதில் ஒவ்வொரு போட்டியாளரும் அவர்கள் இந்த பிக் பாஸ் வீட்டில் இருக்க தகுதியானவர்களா என்பதை கூற அவர்கள் கடந்து வந்த பாதையை பற்றி பேச வேண்டும் என தெரிவிக்கப்பட்டது.

அதன்படி அனைவரும் அவரவர் கதைகளை கூறினர். பாடகர் வேல்முருகன், அறந்தாங்கி நிஷா ஆகியோர் பேசுவதைக் கேட்டு மற்ற போட்டியாளர்கள் கண்ணீரில் மூழ்கினார்கள். அந்த அளவுக்கு அவர்கள் வாழ்க்கையில் சந்தித்த துயரங்கள் மற்றும் அவமானங்கள் பற்றி பேசி இருந்தார்கள்.

தற்போது மூன்றாவது நாளுக்கான முதல் ப்ரொமோ வீடியோ வெளிவந்திருக்கிறது. அதில் கடந்து வந்த பாதையின் டாஸ்க் முடிவில் போட்டியாளர்கள் அனைவரும் பேசி அடுத்த வாரம் நாமினேஷனுக்கு தேர்வாகும் நபர்களை தேர்ந்தெடுக்க வேண்டும் என இன்று பிக் பாஸ் கேட்கிறார்.

அப்போது பாலாஜி முருகதாஸ் அனைவர் முன்னிலையிலும் நின்று, “சனம் ஷெட்டி விபத்து ஏற்பட்டு 14 மாதங்களுக்குப் பிறகு தான் எழுந்து உட்கார்ந்தார்,
ஆனாலும் ஆரியன் கதை அதிகம் Inspiring ஆக இருந்தது. 10 பேர் அதைக் கேட்டால் 10 பேருக்கும் சாதிக்க வேண்டும் என அவர்களுக்குத் தோன்றும்” என கூறி நான்கு போட்டியாளர்களை நாமினேஷனுக்கு தேர்வு செய்கிறார்.

சனம் ஷெட்டி, கேப்ரியலா, ரேகா மற்றும் சம்யுக்தா ஆகியோர் பெயர்களை தான் முருகதாஸ் தேர்வு செய்கிறார்.

அதற்கு பிறகு அவர்கள் 4 பேரும் தான் அடுத்து வார Eviction processல் நாமினேட் செய்ய தேர்வான முதல் 4 நபர்கள் என பிக் பாஸ் அறிவிக்கிறார். அதை கேட்டு அந்த நான்கு போட்டியாளர்களும் சற்று அதிர்ச்சியில் தான் இருக்கிறார்கள்.

இந்த வாரம் முதல் வாரம் என்பதால் யாரும் எலிமினேட் செய்யப்படமாட்டார்கள் என கமல்ஹாசன் முன்பே அறிவித்து விட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

இருப்பினும் போட்டியாளர்களிடம் அது பற்றி இன்னும் தெரிவிக்கப்படவில்லை.

மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, கொழும்பு தமிழ் Android Mobile App இனை, இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.

சமூக ஊடகங்களில் கொழும்பு தமிழ்:

கொழும்பு தமிழ் ஃபேஸ்புக்
கொழும்பு தமிழ் ட்விட்டர்
கொழும்பு தமிழ் இன்ஸ்டாகிராம்
கொழும்பு தமிழ் டெலிகிராம்
கொழும்பு தமிழ் யு டியூப்

Get all the Latest Sir Lanka Tamil News and Tamil World News at Colombo Tamil. You can also catch all the latest Tamil Entertainment News by following us on Twitter and Facebook. also Download Our News App in Google Play Store.

Total
3
Shares
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Previous Article

போன வருஷமே பிக் பாஸ் அழைப்பு வந்தது.. வீட்ல அனுப்பல: ஷிவானி

Next Article

என்னடா லாஜிக் இது.. பிக் பாஸை ட்ரோல் செய்யும் நெட்டிசன்கள்

Related Posts
அனுஷ்கா
Read More

அனுஷ்காவின் திடீர் முடிவால் தயாரிப்பு நிறுவனங்கள் தடுமாற்றம்

அனுஷ்கா தற்போது பெண் மையக் கதாபாத்திரங்களில் கொண்ட படங்களில் நடிக்க ஆர்வம் காட்டுவதில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது. இதற்கு அனுஷ்கா நடிப்பில் லேட்டஸ்ட்டாக வெளியான சைலன்ஸ்…
Read More

இரண்டாவது இன்னிங்சில் அதிரடியாக களமிறங்கிய சிம்பு!

இயக்குனர் சுசீந்திரன் இயக்கத்தில் ஈஸ்வரன் திரைப்படத்தினை வெறும் 30 நாட்களில் படப்பிடிப்பு மற்றும் டப்பிங் பணிகளை முடித்த சிம்பு, வெங்கட் பிரபு இயக்கத்தில் சுரேஷ்…
Read More

மாநாடு படத்தின் புதிய போஸ்டர் வெளியானது

கடந்த 2018 ஆம் ஆண்டு சிம்பு மாநாடு படத்தில் நடிக்கவிருப்பதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது. இயக்குநர் வெங்கட் பிரபு இப்படத்தை இயக்குகிறார். படப்பிடிப்பு தொடங்கினாலும்…
Total
3
Share