Sat, May8, 2021

மேஷம்

ரிஷபம்

மிதுனம்

கடகம்

சிம்மம்

கன்னி

துலாம்

விருச்சிகம்

தனுசு

மகரம்

கும்பம்

மீனம்

இதையும் படிங்க

நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 600ஐ கடந்துள்ளது.

4 கொரோனா வைரஸ் மரணங்கள் பதிவானதை அடுத்து நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 602ஆக அதிகரித்துள்ளது.

மஹரகமை பகுதியை சேர்ந்த 76 வயதான ஆண் ஒருவர் கொரோனா வைரஸ் தொற்றால் உயிரிழந்தார்.

ஸ்ரீ ஜயவர்தனபுர வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு கொரோனா வைரஸ் தொற்றுள்ளமை கண்டறியப்பட்டதை அடுத்து அவர் தேசிய தொற்று நோயியல் நிறுவகத்திற்கு மாற்றப்பட்டிருந்தார். இந்தநிலையில் நேற்று முன்தினம் அவர் உயிரிழந்தார்.

கொரோனா வைரஸ் நிமோனியா நிலை, உயர் குருதி அழுத்தம், இருதய நோய் என்பன இந்த மரணத்திற்கான காரணங்கள் என அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அதேநேரம் அக்குரஸ்ஸ பிரதேசத்தைச் சேர்ந்த 71 வயதான பெண்ணொருவரும் கொரோனா வைரஸ் தொற்றால் மரணித்தார்.

கொழும்பில் உள்ள தனியார் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் தொற்றுறுதியானதை அடுத்து அவர் தேசிய தொற்று நோயியல் நிறுவகத்திற்கு மாற்றப்பட்டிருந்தார்.

குருதி விஷமானமையால் ஏற்பட்ட அதிர்ச்சி, தீவிர சிறுநீரக பாதிப்பு, நீரிழிவு உள்ளிட்ட நோய் நிலைமைகளால் நேற்றைய தினம் அவர் உயிரிழந்தார்.

நாரஹேன்பிட்டி பகுதியைச் சேர்ந்த 74 வயதுடைய பெண் ஒருவர், கொழும்பு தேசிய வைத்தியசாலையில் வைத்து கொவிட்-19 தொற்றுறுதியானவர் என அடையாளம் காணப்பட்டார்.

இதையடுத்து, ஹோமாகம ஆதார வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட நிலையில், அவர் நேற்று உயிரிழந்தார்.

கொவிட்-19 தொற்று, நீண்டகால நுரையீரல் நோயுடன் குருதி விஷமானமை மற்றும் வலது நுரையீரல் செயலிழந்தமை என்பன அவரின் மரணத்திற்கான காரணங்களாக தெரிவிக்கப்பட்டுள்ளன.

காலி பிரதேசத்தைச் சேர்ந்த 45 வயதுடைய ஆண் ஒருவர், மஹரகம புற்றுநோய் வைத்தியசாலையில் வைத்து, கொவிட்-19 தொற்றுறுதியானவர் என அடையாளம் காணப்பட்டதை அடுத்து, தேசிய தொற்று நோயியல் நிறுவகத்திற்கு மாற்றப்பட்ட நிலையில், நேற்று முன்தினம் மரணித்தார்.

கொவிட்-19 தொற்றுறுடன், இரத்தவாதம் மற்றும் லியூகேமியா நிலையே அவரின் மரணத்திற்கான காரணங்கள் என அரசாங்க தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, கொழும்பு தமிழ் Android Mobile App இனை, இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.

சமூக ஊடகங்களில் கொழும்பு தமிழ்:

கொழும்பு தமிழ் ஃபேஸ்புக்
கொழும்பு தமிழ் ட்விட்டர்
கொழும்பு தமிழ் இன்ஸ்டாகிராம்
கொழும்பு தமிழ் டெலிகிராம்
கொழும்பு தமிழ் யு டியூப்

Get all the Latest Sir Lanka Tamil News and Tamil World News at Colombo Tamil. You can also catch all the latest Tamil Entertainment News by following us on Twitter and Facebook. also Download Our News App in Google Play Store.

தொடர்புச் செய்திகள்

ஆசிரியரிடமிருந்து மேலும் பதிவுகள்

மேலும் பதிவுகள்

பிந்திய செய்திகள்

x