Tue, Jan26, 2021

மேஷம்

ரிஷபம்

மிதுனம்

கடகம்

சிம்மம்

கன்னி

துலாம்

விருச்சிகம்

தனுசு

மகரம்

கும்பம்

மீனம்

இதையும் படிங்க

நாட்டில் இறுதியான உயிரிழந்த தொற்றாளர்கள் தொடர்பில் வெளியான விவரம்

நாட்டில் கொரோனா வைரஸ் காரணமாக 8 மரணங்கள் நேற்று (27) பதிவாகியுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதனையடுத்து, நாட்டில் இதுவரை கொரோனா வைரஸ் காரணமாக உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 107 ஆக அதிகரித்துள்ளது

கொழும்பு 13 பிரதேசத்தைச் சேர்ந்த 87 வயதான பெண், 2020 நவம்பர் மாதம் 23 ஆம் திகதி வீட்டில் உயிரிழந்துள்ளார். மரணத்திற்கான காரணம் கொவிட் தொற்றுக்குள்ளானதுடன் ஏற்பட்ட மாரடைப்பாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு 09 தெமட்டகொடை பிரதேசத்தைச் சேர்ந்த 54 வதான பெண், மஹரகம அபேக்ஷா வைத்தியசாலையிலிருந்து கொவிட் 19 தொற்றக்குள்ளானவர் என இனங்காணப்பட்ட பின்னர் ஹோமாகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அத்தோடு அந்த வைத்தியசாலையில் 2020 நவம்பர் மாதம் 27 ஆம் திகதி உயிரிழந்துள்ளார். மரணத்திற்கான காரணம் புற்றுநோயுடன் அதியுயர் கொவிட் 19 நிமோனியா நிலை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மருதானை பிரதேசத்தைச் சேர்ந்த 78 வயதான பெண். 2020 நவம்பர் மாதம் 25 ஆம் திகதி வீட்டில் உயிரிழந்துள்ளார். மரணத்திற்கான காரணம் கொவிட் 19 தொற்றக்குள்ளானதுடன் ஏற்பட்ட மாரடைப்பாகும்.

கொழும்பு 15 பிரதேசத்தைச் சேர்ந்த 36 வயதான ஆண், கொழும்பு தேசிய வைத்தியசாலையில் கொவிட் 19 தொற்றுக்குள்ளானவர் என இனங்காணப்பட்ட பின்னர் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

பின்னர் 2020 நவம்பர் மாதம் 27ஆம் திகதி உயிரிழந்துள்ளார். மரணத்திற்கான காரணம் நாற்பட்ட நுரையீரல் நோயுடன் கொவிட் 19 வைரசு நிலை அதிகரித்தமை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு 02 பிரதேசத்தைச் சேர்ந்த 83 வயதான ஆண், 2020 நவம்பர் மாதம் 26 ஆம் திகதி வீட்டில் உயிரிழந்துள்ளார். மரணத்திற்கான காரணம் கொவிட் 19 தொற்றுக்குள்ளானதுடன் ஏற்பட்ட மாரடைப்பாகும்.

கொழும்பு 10 மாளிகாவத்தை பிரதேசத்தைச் சேர்ந்த 58 வயதான பெண், 2020 நவம்பர் மாதம் 26ஆம் திகதி வீட்டில் உயிரிழந்துள்ளார். மரணத்திற்கான காரணம் கொவிட் 19 தொற்றுக்குள்ளானதுடன் ஏற்பட்ட மாரடைப்பாகும்.

கொழும்பு 13 பிரதேசத்தைச் சேர்ந்த 69 வயதான ஆண், 2020 நவம்பர் மாதம் 25ஆம் திகதி வீட்டில் உயிரிழந்துள்ளார். மரணத்திற்கான காரணம் நாள்பட்ட நுரையீரல் நோய் மற்றும் ஆஸ்துமா நோயுடன் கொவிட்19 தொற்று நிலைமை தீவிரமடைதமையென தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு மெகசின் சிறைச்சாலையில் இருந்த 70 வயதான ஆண், சிறைச்சாலை வைத்தியசாலையில் 2020 நவம்பர் மாதம் 25 ஆம் திகதி உயிரிழந்துள்ளார்.

மரணத்திற்கான காரணம் கொவிட் 19 தொற்றுக்குள்ளானதுடன் அதியுயர் நீரிழிவு நோய் நிலைமை ஆகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, கொழும்பு தமிழ் Android Mobile App இனை, இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.

சமூக ஊடகங்களில் கொழும்பு தமிழ்:

கொழும்பு தமிழ் ஃபேஸ்புக்
கொழும்பு தமிழ் ட்விட்டர்
கொழும்பு தமிழ் இன்ஸ்டாகிராம்
கொழும்பு தமிழ் டெலிகிராம்
கொழும்பு தமிழ் யு டியூப்

Get all the Latest Sir Lanka Tamil News and Tamil World News at Colombo Tamil. You can also catch all the latest Tamil Entertainment News by following us on Twitter and Facebook. also Download Our News App in Google Play Store.

தொடர்புச் செய்திகள்

ஆசிரியரிடமிருந்து மேலும் பதிவுகள்

மேலும் பதிவுகள்

பிந்திய செய்திகள்