நாட்டில் இறுதியாக பதிவான தொற்றாளர் விவரம்

கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் 439 பேர் நேற்று (19) அடையாளம் காணப்பட்டதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

பேலியகொட கொத்தணி யுடன் நெருங்கிப்பழகிய 437பேரும் தனிமைப்படுத்தலில் இருந்த இந்திய மாலுமிகள்2 பேரும் இவ்வாறு தொற்றுக்கு உள்ளாகியுள்ளனர்.

இதனையடுத்து, நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களின் மொத்த எண்ணிக்கை 18, 841ஆக அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.

இதேவேளை, மினுவாங்கொடை மற்றும் பேலியகொடை கொத்தணி வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 15,330 அதிகரித்துள்ளது.

கடந்த 24 மணித்தியாலங்களில் கொழும்பு10, கொழும்பு 15 மற்றும் களுத்துறை மாவட்டத்தின் பொகுனுவிட மற்றும் ஹல்தொட பிரதேசங்களைச் சேர்ந்த கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட நான்கு பேர் உயிரிழந்துள்ளனர்.

இதற்கமைய, நாட்டில் கொரோனா வைரஸ் காரணமாக உயிரிழந்தோரின் எண்ணிக்கை 73 ஆக பதிவாகியுள்ளது.

அத்துடன், முப்படையினரால் மேற்பார்வை செய்யப்படும் தனிமைப்படுத்தல் மையங்களில் 3,419 பேர் தனிமைப்படுத்தல் செயற்பாடுகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாகவும் கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் தேசிய செயற்பாட்டு மத்திய நிலையம் மேலும் தெரிவித்துள்ளது.

இதேவேளை, கொரோனா தொற்றுக்குள்ளானவர்களில் 12,903 பேர் இதுவரை பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளதுடன், 5869 பேர் சிகிச்சைப்பெற்றுவருவதாக அந்த நிலையம் தெரிவித்துள்ளது.

மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, கொழும்பு தமிழ் Android Mobile App இனை, இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.

சமூக ஊடகங்களில் கொழும்பு தமிழ்:

கொழும்பு தமிழ் ஃபேஸ்புக்
கொழும்பு தமிழ் ட்விட்டர்
கொழும்பு தமிழ் இன்ஸ்டாகிராம்
கொழும்பு தமிழ் டெலிகிராம்
கொழும்பு தமிழ் யு டியூப்

Get all the Latest Sir Lanka Tamil News and Tamil World News at Colombo Tamil. You can also catch all the latest Tamil Entertainment News by following us on Twitter and Facebook. also Download Our News App in Google Play Store.

Total
6
Shares
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Previous Article

கொரோனா தொற்றாளர் இருவர் தப்பியோட்டம்

Next Article
DAILY HOROSCOPE 18th november, இன்றைய ராசிபலன் 2019 ஒக்டோபர் 15, Today Rasi Palan

இன்றைய ராசிபலன் 20.11.2020 – திடீர் யோகம் கிட்டும் நாள்!

Related Posts
Read More

நாட்டில் இறுதியாக பதிவான தொற்றாளர்கள் பற்றிய விவரம்

நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளான மேலும் 251 பேர் இனங்காணப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இவர்கள் அனைவரும் திவுலபிட்டிய – பேலியகொட…
Read More

இறுதியாக பதிவான தொற்றாளர்கள் தொடர்பில் வெளியான தகவல்

நாட்டில் 559 பேருக்கு கொவிட்19 தொற்று நேற்று (26) உறுதியானது. பேலியகொடை மீன் சந்தை கொத்தணியுடன் தொடர்புடைய 553 பேர் மற்றும் வெளிநாடுகளில் இருந்து…
கொரோனா
Read More

கொரோனாவால் மரணித்தோரின் எண்ணிக்கை 99 ஆக உயர்வு

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளான மேலும் மூவர் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உறுதிசெய்துள்ளார். இதற்கமைய இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு…
Read More

நாட்டில் தொற்றாளர் எண்ணிக்கை மேலும் உயர்வு

நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட 342 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இவர்கள் அனைவரும் பேலியகொட மற்றும் திவுலுப்பிட்டிய கொரோனா கொத்தணி தொற்றாளர்களுடன் தொடர்பினை…
Total
6
Share