நாட்டின் பல பகுதிகளில் 100 மி.மீ. இற்கு அதிக பலத்த மழை!

நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் மேக மூட்டமான வானம் காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

நாட்டின் பல பகுதிகளில் 100 மி.மீ. இற்கு அதிக பலத்த மழை!

சூறாவளியின் தாக்கம் காரணமாக இன்றையதினம் (08) வடக்கு, வடமத்திய, கிழக்கு, ஊவா, மத்திய, வடமேற்கு மாகாணங்களின் சில இடங்களில் 100 மி.மீ. இற்கும் அதிக பலத்த மழை பெய்யும் சாத்தியம் காணப்படுவதாக, வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

தென்கிழக்கு வங்காள விரிகுடா கடற்பரப்புகளில் (திருகோணமலைக்கு கிழக்காக 360 கிலோ மீட்டர் தூரத்தில்) நிலை கொண்டுள்ள ஆழ்ந்த தாழமுக்கமானது 'Mandous' என்ற ஒரு சூறாவளியாக வலுவடைந்து தற்போது வட அகலாங்கு 9.4 N இற்கும் கிழக்கு நெட்டாங்கு 84.1 E இற்கும் அருகில் மையம் கொண்டுள்ளதாக திணைக்களம் தெரிவித்துள்ளது.

அது மேற்கு- வடமேற்கு திசையில் நகர்ந்து, நாளை (09) இரவுப் பொழுதில் தென்மேற்கு வங்காள விரிகுடா கடற்பரப்பில் வட தமிழ்நாடு, பாண்டிச்சேரி, தென் ஆந்திரப் பிரதேச கரையோரப் பிரதேசங்களை அடையக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் மேக மூட்டமான வானம் காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

வடக்கு, வடமத்திய, கிழக்கு மாகாணங்களில் அவ்வப்போது மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. வடக்கு மாகாணத்திலும் திருகோணமலை மாவட்டத்திலும் சில இடங்களில் சில இடங்களில் 100 மி.மீ. இற்கும் அதிகமான பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.

வடக்கு, வடமத்திய, கிழக்கு மாகாணங்களில் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 60-70 கிலோ மீற்றர் வரை வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

மேல் மாகாணத்திலும் காலி, மாத்தறை மாவட்டங்களிலும் சிறிதளவில் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது.