இடியுடன் கூடிய மழை

நாட்டின் பல பகுதிகளில் அவ்வப்போது மழை பெய்யும்

சப்ரகமுவ, மேல் மற்றும் மத்திய மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

அத்துடன், வடமேல் மாகாணத்தில் பல தடவைகள் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

ஊவா மாகாணத்தில் சில இடங்களில் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் 75 மி.மீ அளவான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.

தென் மாகாணத்திலும் பொலன்னறுவை, மன்னார், மற்றும் மாத்தளை மாவட்டங்களிலும் மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுப் பகுதிகளிலும் காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 60 கிலோமீற்றர் வரை அதிகரிக்கக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது

பேருவளையிலிருந்து காலி ஊடாக ஹம்பாந்தோட்டை வரையான கரையோரத்தை அண்டிய பகுதிகளில் உயர் அலைகள் காரணமாக கடல் அலைகள் கரையை அண்டிய நிலப்பகுதிகளுக்கு வரக்கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

கரையோரப் பிரதேசங்களில் வசிக்கும் பொதுமக்கள் இவ்விடயம் தொடர்பாக அவதானமாக இருக்குமாறு வேண்டிக் கொள்ளப்படுகிறீர்கள்.

நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் காற்றானது தென்மேற்கு திசையிலிருந்து வீசக்கூடும். காற்றின் வேகமானது மணித்தியாலத்துக்கு 40-50 கிலோ மீற்றர் வரை காணப்படும்.

மன்னாரிலிருந்து கொழும்பு, காலி மற்றும் ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கடற்பரப்புகளில் காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 60-65 கிலோமீற்றர் வரை அதிகரிக்கக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

மன்னாரிலிருந்து கொழும்பு, காலி மற்றும் ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கடற்பரப்புகள்அவ்வப்போது கொந்தளிப்பாகக்காணப்படும்.

நாட்டைச் சூழவுள்ள ஏனைய கடற்பரப்புகள் அவ்வப்போது ஓரளவு கொந்தளிப்பாகக் காணப்படும்.

பேருவளையிலிருந்து காலி ஊடாக ஹம்பாந்தோட்டை வரையான கடற்பரப்புகளில் கடல் அலைகள் 2.0 – 3.0 மீற்றர் உயரம் வரை (இது கரைக்கு வரும் அலைகளின் உயரம் அல்ல) மேலெழும்பக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

கடலில் பயணம் செய்வோரும் மீனவ சமூகமும் கரையோரப் பிரதேசங்களில் வசிக்கும் பொதுமக்களும் இவ்விடயம் தொடர்பாக அவதானமாக இருக்குமாறு வேண்டிக் கொள்ளப்படுகிறீர்கள்.

செய்திகளை உடனுக்குடன் TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்… https://t.me/colombotamil

Get all the Latest Sir Lanka Tamil News and Tamil World News at Colombo Tamil. You can also catch all the latest Tamil Entertainment News by following us on Twitter and Facebook. also Download Our News App in Google Play Store.

Total
2
Shares
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Previous Article
DAILY HOROSCOPE 18th november, இன்றைய ராசிபலன் 2019 ஒக்டோபர் 15, Today Rasi Palan

இன்றைய ராசிபலன் 01.08.2020 – திடீர் யோகம் கிட்டும் நாள்!

Next Article
கோட்டாபய ராஜப்க்

ஹஜ் பெருநாளுக்கான ஜனாதிபதியின் வாழ்த்துச் செய்தி

Related Posts
Read More

தொழிலதிபருடன் திடீர் காதல்.. சர்கார் பட நடிகை ரகசிய திருமணம்

விஸ்வாசம், சர்கார் படங்களில் நடித்துள்ள பிரபல நடிகை, தொழிலதிபரை திருமணம் செய்துகொண்டார். பிரபல நடிகை பாப்ரி கோஷ். மேற்கு வங்கத்தைச் சேர்ந்த அவர், பெங்காலி…
பசில் ராஜபக்ஷ
Read More

திவிநெகும வழக்கிலிருந்து பசில் ராஜபக்ஷ விடுதலை

திவிநெகும மோசடி வழக்கிலிருந்து முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷ உள்ளிட்ட நால்வரை கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று (30) விடுவித்துள்ளது. கடந்த ஜனாதிபதித் தேர்தல்…
இன்றைய ராசி பலன்கள்
Read More

இந்த 3 ராசிக்காரர்கள் வீண் விவாதத்தை தவிர்க்காவிட்டால் பின்விளைவு மோசமாக இருக்குமாம்!

நம் வாழ்வின் ஒவ்வொரு நாளும் எப்படி இருக்கும் என்று முன்பே தெரிந்தால் அதனை மேலும் சிறப்பாக மாற்றிட முடியும் அல்லவா? அதற்கு உதவுவது தான்…
Total
2
Share