Tue, Jan26, 2021

மேஷம்

ரிஷபம்

மிதுனம்

கடகம்

சிம்மம்

கன்னி

துலாம்

விருச்சிகம்

தனுசு

மகரம்

கும்பம்

மீனம்

இதையும் படிங்க

நாடாளுமன்ற நடவடிக்கை நாளை வரை ஒத்திவைப்பு

9ஆவது நாடாளுமன்றத்தின் முதல் அமர்வு இன்று காலை 9.30 மணிக்கு ஆரம்பமானது.

அமர்வின் ஆரம்பத்தில் புதிய சபாநாயகர், பிரதி சபாநாயகர் மற்றும் குழுக்களின் பிரதி தவிசாளர் ஆகியோர் வாக்கெடுப்பு இன்றி தெரிவு செய்யப்பட்டனர்.

இதன்படி புதிய சபாநாயகராக பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்த யாப்பா அபேவர்தனவும் பிரதி சபாநாயகராக ரஞ்சித் சியம்பலாப்பிட்டியவும் குழுக்களின் பிரதி தவிசாளராக அங்ஜன் இராமநாதன் தெரிவு செய்யப்பட்டார்.

இதனைத் தொடர்ந்து நாடாளுமன்றத்தின் எதிர்க் கட்சித் தலைவராக சஜித் பிரேமதாச, சபாநாயகரால் அறிவிக்கப்பட்டார். பின்னர் சபை நடவடிக்கை பிற்பகல் 3 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.

பிற்பகல் 3 மணிக்கு அரசியலமைப்பின் 33 (2) உறுப்புரையின் கீழ் ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரத்துக்கு அமைய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அரசாங்கத்தின் கொள்கைப் பிரகடன உரையை நிகழ்த்தினார்.

ஜனாதிபதியின் கொள்கைப் பிரகடன உரையை தொடர்ந்து, நாளை (21) காலை 9.30 மணி வரையில் நாடாளுமன்றம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி நாடாளுமன்றத்துக்கு வருகைதரும் நிகழ்வு அவருடைய அறிவுறுத்தலின் பேரில் மிகவும் சாதாரணமானமுறையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இதற்கமைய மரியாதை வேட்டுக்கள் தீர்க்கப்படுதல் மற்றும் வாகன அணிவகுப்பு போன்றவை இடம்பெறவில்லை.

செய்திகளை உடனுக்குடன் TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்… https://t.me/colombotamil

Get all the Latest Sir Lanka Tamil News and Tamil World News at Colombo Tamil. You can also catch all the latest Tamil Entertainment News by following us on Twitter and Facebook. also Download Our News App in Google Play Store.

தொடர்புச் செய்திகள்

ஆசிரியரிடமிருந்து மேலும் பதிவுகள்

மேலும் பதிவுகள்

பிந்திய செய்திகள்