Tue, Mar9, 2021

மேஷம்

ரிஷபம்

மிதுனம்

கடகம்

சிம்மம்

கன்னி

துலாம்

விருச்சிகம்

தனுசு

மகரம்

கும்பம்

மீனம்

இதையும் படிங்க

நாசா அனுப்பிய ரோபோட்டிக் ரோவர் நாளை மதியம் செவ்வாயில் தரையிறங்குகிறது

அமெரிக்காவின் நாசா விண்வெளி ஆய்வு மையம் அனுப்பிய ரோபோட்டிக் ரோவர் நாளை மதியம் செவ்வாயில் தரையிறங்குகிறது.

7 மாத பயணைத்தை அடுத்து செவ்வாய் கிரகத்தில் ஜெசெரோ பள்ளத்தில் இந்த ரோவர் தரையிறங்க உள்ளது.

ரோவார் தரையிறங்கும் கடைசி 7 நிமிடங்கள் திட்டம் வெற்றியடைய மிகவும் முக்கியமானது என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

தற்போது ரோவர் சரியான திசையில் உள்ளது என தெரிவித்து இருக்கும் விஞ்ஞானிகள், அதனுடைய பாதையில் மேலும் மாற்றங்களை செய்ய திட்டமிடவில்லை என தெரிவித்து உள்ளனர்.

இதற்கிடையே ரோவர் எப்படி தரையிறங்க திட்டமிடப்பட்டுள்ளது என்ற வீடியோவும் வெளியிடப்பட்டுள்ளது.

ரோவர் அதனுடன் 7 கருவிகளை கொண்டு செல்கிறது. ஸும் வசதியுடன் கூடிய சூப்பர் கேமரா சிஸ்டமும் அதில் அடங்கும்.

ரோவரில் உள்ள மிகவும் சுவாரஸ்யமான கருவிகளில் ஒன்று மோக்ஸி (MOXIE) இது செவ்வாய் வளிமண்டலத்தில் உள்ள கார்பன் டை ஆக்சைடில் இருந்து ஆக்ஸிஜனை உருவாக்கும்.

இந்த கருவி வெற்றிகரமாக செயல்பட்டால், எதிர்காலத்தில் விண்வெளி வீரர்கள் பூமிக்கு திரும்புவதற்கு ராக்கெட் எரிபொருளை எரிக்க இதை பயன்படுத்திக் கொள்ளலாம். ஆனால் இது நாள் வரையில் ஒரு மனிதனும் கூட செவ்வாயில் கால் வைத்ததில்லை.

 

மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, கொழும்பு தமிழ் Android Mobile App இனை, இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.

சமூக ஊடகங்களில் கொழும்பு தமிழ்:

கொழும்பு தமிழ் ஃபேஸ்புக்
கொழும்பு தமிழ் ட்விட்டர்
கொழும்பு தமிழ் இன்ஸ்டாகிராம்
கொழும்பு தமிழ் டெலிகிராம்
கொழும்பு தமிழ் யு டியூப்

Get all the Latest Sir Lanka Tamil News and Tamil World News at Colombo Tamil. You can also catch all the latest Tamil Entertainment News by following us on Twitter and Facebook. also Download Our News App in Google Play Store.

தொடர்புச் செய்திகள்

ஆசிரியரிடமிருந்து மேலும் பதிவுகள்

மேலும் பதிவுகள்

பிந்திய செய்திகள்

x