நவாஸ் மீது மேலும் இரண்டு ஊழல் வழக்கு

0

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர், நவாஸ் ஷெரீப் மீது, மேலும் இரு ஊழல் வழக்குகள் தொடர, அந்நாட்டின் தேசிய பொறுப்புடமை வாரியக் குழு அனுமதித்துள்ளது.

கடந்த, 2019 நவம்பரில், லாகூர் உயர் நீதிமன்ற அனுமதியுடன், நவாஸ் ஷெரீப் இதய நோய் சிகிச்சைக்காக லண்டன் சென்றார்.

அவர் மீது, பிரதமர் இம்ரான் கான் தலைமையிலான பாக்., அரசு, ஏற்கனவே, ஐந்து ஊழல் வழக்குகளை தொடுத்துள்ளது.

இந்நிலையில், நவாஸ் ஷெரீப், அவரது சகோதரர் ஷாபாஸ் ஷெரிப், மகள் மரியம் நவாஸ் மற்றும், 13 பேர் மீது, 700 கோடி ரூபாய் சொத்து குவிப்பு, சட்ட விரோத பணப் பரிமாற்றம் ஆகிய குற்றச்சாட்டுகளில், வழக்கு பதிவு செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

மேலும், 1986ல், நவாஸ் ஷெரீப், பஞ்சாப் முதல்வராக இருந்த போது, சட்டத்திற்கு புறம்பாக, நிலம் ஒதுக்கி ஊழல் செய்தது தொடர்பாக வழக்கு தொடுக்கவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இந்த இரு வழக்குகளும், அடுத்த வாரம், தேசிய பொறுப்புடைமை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட உள்ளதாக, அரசு அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

லஞ்ச ஊழல் கண்காணிப்பு அமைப்பான, தேசிய பொறுப்புடைமை வாரியம், பல முறை, ‘சம்மன்’ அனுப்பியும், நவாஸ் ஷெரீப் விசாரணைக்கு ஆஜராகாததால், அவரை கைது செய்ய வாரன்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், நவாஸ் ஷெரீப்பை அறிவிக்கப்பட்ட குற்றவாளி என பிரகடனப்படுத்த, தேசிய பொறுப்புடைமை நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

செய்திகளை உடனுக்குடன் TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்… https://t.me/colombotamil

Get all the Latest Sir Lanka Tamil News and Tamil World News at Colombo Tamil. You can also catch all the latest Tamil Entertainment News by following us on Twitter and Facebook. also Download Our News App in Google Play Store.

Get real time updates directly on you device, subscribe now.

Leave A Reply

Your email address will not be published.

x