நளினி உட்பட 6 பேரின் விடுதலையை எதிர்த்து மத்திய அரசு மறுசீராய்வு மனு

நளினி, பேரறிவாளன், முருகன், சாந்தன், ராபர்ட் பயஸ், ஜெயக்குமார், ரவிச்சந்திரன் ஆகியோர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்று சிறையில் தடுத்துவைக்கப்பட்டிருந்தனர்.

நளினி உட்பட 6 பேரின் விடுதலையை எதிர்த்து மத்திய அரசு மறுசீராய்வு மனு

முன்னாள் இந்திய பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் இருந்த நளினி உள்ளிட்ட 6 பேரை விடுதலை செய்த உச்ச நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து மத்திய அரசு சார்பில் மறு சீராய்வு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

நளினி, பேரறிவாளன், முருகன், சாந்தன், ராபர்ட் பயஸ், ஜெயக்குமார், ரவிச்சந்திரன் ஆகியோர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்று சிறையில் தடுத்துவைக்கப்பட்டிருந்தனர்.

அவர்களில் பேரறிவாளன் கடந்த மே மாதம் நன்னடத்தை அடிப்படையில் விடுதலை செய்யப்பட்டார். இதேபோல தங்களையும் விடுவிக்கக் கோரி ஏனைய ஆறுபேரும் மனுதாக்கல் செய்தனர்.

இதனை ஏற்றுக்கொண்ட உச்சநீதிமன்றம் கடந்த 11ஆம் திகதி ஆறு பேரையும் விடுதலை செய்து தீர்ப்பளித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.