நடிகர் சூர்யா மீது நீதிமன்ற அவமதிப்பு குற்றச்சாட்டு? நடவடிக்கை கோரி நீதிபதி கடிதம்

நீட் தேர்வுக் குறித்து கருத்து தெரிவித்த நடிகர் சூர்யா, ‛உயிருக்கு பயந்து வீடியோ கான்பிரன்ஸிங் மூலம் நீதி வழங்கும் நீதிமன்றம், மாணவர்களை அச்சமில்லாமல் போய் தேர்வு எழுத வேண்டும் என்று உத்தரவிடுகிறது’ என கூறியிருந்தார்.

இந்நிலையில் நீதிமன்றத்தை அவமதித்து பேசியதாக சூர்யா மீது நடவடிக்கை எடுக்க கோரி நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம் சென்னை உயர்நீதிமன்றத்திற்கு கடிதம் எழுதியுள்ளார்.

நாடு முழுவதும் நேற்று (செப்.,13) நீட் தேர்வு நடைபெற்றது. தேர்வு அச்சம் காரணமாக தேர்வுக்கு முந்தைய நாளில் தமிழகத்தில் 3 மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டனர்.

இதனால் எழுந்த பல்வேறு எதிர்ப்புகளுக்கு மத்தியில், நீட் தேர்வு நடந்து முடிந்தது. இந்நிலையில், நீட் தேர்வு குறித்து நடிகர் சூர்யா வெளியிட்ட அறிக்கையில், ‛நம் பிள்ளைகளின் தகுதியையும், திறனையும் வெறும் தேர்வுகள் தீர்மானிக்க அனுமதிக்கக்கூடாது, இனி பெற்றோர்களும், ஆசிரியர்களும் விழிப்புடன் இருக்க வேண்டும்’ எனவும், ‛கொரோனா அச்சத்தால் உயிருக்கு பயந்து வீடியோ கான்பிரன்ஸிங் மூலம் நீதி வழங்கும் நீதிமன்றம், மாணவர்களை அச்சமில்லாமல் போய் தேர்வு எழுத வேண்டும் என்று உத்தரவிடுகிறது’ எனவும் குறிப்பிட்டிருந்தார்.

இந்த நிலையில், நீதிமன்றத்தின் செயல்பாட்டை விமர்சித்து அறிக்கை வெளியிட்ட நடிகர் சூர்யா மீது சென்னை உயர்நீதிமன்றம் தானாக முன்வந்து நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர வேண்டுமென்று கோரி நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம், தலைமை நீதிபதி அம்ரேஷ்வர் பிரதாப் சாஹிக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.

அதில், ‛என்னுடைய கருத்துப்படி, அந்த அறிக்கையானது நீதிபதிகளின் ஒருமைப்பாடு மற்றும் ஈடுபாட்டையும், நமது நாட்டின் நீதிமன்ற கட்டமைப்பையும் குறைமதிப்புக்கு உட்படுத்தும் வகையில் மட்டுமின்றி அதை தவறான முறையில் விமர்சித்துள்ளதால் நீதிமன்ற அவமதிப்பு வழக்கை தொடரலாம். மேலும், இதனால் நீதித்துறை மீதான மக்களின் நம்பிக்கைக்கும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது,’ இவ்வாறு கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, கொழும்பு தமிழ் Android Mobile App இனை, இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.

சமூக ஊடகங்களில் கொழும்பு தமிழ்:

கொழும்பு தமிழ் ஃபேஸ்புக்
கொழும்பு தமிழ் ட்விட்டர்
கொழும்பு தமிழ் இன்ஸ்டாகிராம்
கொழும்பு தமிழ் டெலிகிராம்
கொழும்பு தமிழ் யு டியூப்

Get all the Latest Sir Lanka Tamil News and Tamil World News at Colombo Tamil. You can also catch all the latest Tamil Entertainment News by following us on Twitter and Facebook. also Download Our News App in Google Play Store.

Total
1
Shares
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Previous Article
விபத்து, விபத்தில்

யாழில் 10 ஆண்டுகளில் வீதி விபத்துக்களால் 1497பேர் உயிரிழப்பு

Next Article
பூசா சிறைச்சாலை

பூசா சிறைச்சாலை கைதிகளின் உண்ணாவிரதம் கைவிடப்பட்டது

Related Posts
Read More

விவசாயிகள் பேரணி : டெல்லி எல்லைகள் மூடப்பட்டன; போக்குவரத்துக்கு அனுமதி மறுப்பு

விவசாயிகள் நலனை காக்கும் நோக்கில் இந்திய மத்திய அரசு கொண்டு வந்த 3 வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்தும், அவற்றை வாபஸ் பெற வலியுறுத்தியும்…
இன்றைய ராசி பலன்கள்
Read More

இந்த ராசிக்காரர்கள் இன்று சிக்கனமாக செலவு செய்வது நல்லது!

ஒவ்வொரு நாளும் ஏற்படக்கூடிய நல்லது கெட்டதுகளை முன்கூட்டியே தெரிந்து கொண்டால் அதற்கேற்க அவற்றை சுலபமாக கையாளலாம் அல்லவா? அதற்காக தான் ராசிபலன் உதவுகிறது. டிசம்பர்…
Read More

தொழிலதிபருடன் திடீர் காதல்.. சர்கார் பட நடிகை ரகசிய திருமணம்

விஸ்வாசம், சர்கார் படங்களில் நடித்துள்ள பிரபல நடிகை, தொழிலதிபரை திருமணம் செய்துகொண்டார். பிரபல நடிகை பாப்ரி கோஷ். மேற்கு வங்கத்தைச் சேர்ந்த அவர், பெங்காலி…
Total
1
Share