Sun, Jan17, 2021

மேஷம்

ரிஷபம்

மிதுனம்

கடகம்

சிம்மம்

கன்னி

துலாம்

விருச்சிகம்

தனுசு

மகரம்

கும்பம்

மீனம்

தேர்தல் பிரசாரத்தில் மழையில் உற்சாக நடனமாடிய கமலா ஹாரிஸ்

அமெரிக்காவில் தேர்தல் பிரசாரத்தின்போது துணை ஜனாதிபதி வேட்பாளர் கமலா ஹாரிஸ் மழையில் நடனமாடிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

அமெரிக்காவில் வருகிற நவம்பர் 3ம் திகதி ஜனாதிபதி தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் ஜனநாயக கட்சி சார்பில் முன்னாள் துணை ஜனாதிபதி ஜோ பிடென் போட்டியிடுகிறார்.

தமிழகத்தை சேர்ந்தவரும், இந்திய வம்சாவளியை சேர்ந்தவருமான கமலா ஹாரிஸ், இக்கட்சியின் துணை ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிடுகிறார்.

தேர்தல் நெருங்கி வரும் நிலையில் வேட்பாளர்களின் பிரசாரம் தீவிரமடைந்து உள்ளது. புளோரிடாவில் கமலா ஹாரிஸ் நேற்று முன்தினம் பிரசாரம் செய்தார்.

அப்போது, திடீரென மழை பெய்ய தொடங்கியது. மேடையில் நின்று பிரசாரத்தில் ஈடுபட்டு இருந்த கமலா ஹாரிஸ், மழை வந்தபோதும் அங்கிருந்து செல்லவில்லை. மாறாக குடையை பிடித்தப்படி தனது பிரசாரத்தை தொடர்ந்தார்.

மேலும், அங்கு திரண்டு இருந்த ஆதரவாளர்களை உற்சாகப்படுத்தும் வகையில் குடையை பிடித்தபடி மழையில் நடனமாடினார். கமலா நடனமாடியதை பார்த்த உற்சாகத்தில் அங்கு கூடியிருந்த மக்களும் நடனமாடி மகிழ்ந்தனர்.

மேடை மீது கமலா ஹாரிஸ் குடைபிடித்தபடி நடனமாடும் வீடியோ, சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. இது தொடர்பான புகைப்படத்தை டிவிட்டரில் வெளியிட்டுள்ள கமலா ஹாரிஸ், ‘மழையோ, வெயிலோ அல்லது ஜனநாயகமோ யாருக்காகவும் காத்திருக்காது,’ என கூறியுள்ளார்.

மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, கொழும்பு தமிழ் Android Mobile App இனை, இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.

சமூக ஊடகங்களில் கொழும்பு தமிழ்:

கொழும்பு தமிழ் ஃபேஸ்புக்
கொழும்பு தமிழ் ட்விட்டர்
கொழும்பு தமிழ் இன்ஸ்டாகிராம்
கொழும்பு தமிழ் டெலிகிராம்
கொழும்பு தமிழ் யு டியூப்

Get all the Latest Sir Lanka Tamil News and Tamil World News at Colombo Tamil. You can also catch all the latest Tamil Entertainment News by following us on Twitter and Facebook. also Download Our News App in Google Play Store.

Latest news

Related news