Thu, May13, 2021

மேஷம்

ரிஷபம்

மிதுனம்

கடகம்

சிம்மம்

கன்னி

துலாம்

விருச்சிகம்

தனுசு

மகரம்

கும்பம்

மீனம்

Latest Posts

தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழா

தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் 2019ம் ஆண்டுக்கான 13ஆவது உள்வாரி மாணவர்களுக்கான பொதுப் பட்டமளிப்பு விழாவின் முதலாவது அமர்வு, பல்கலைக்கழக ஒலுவில் வளாக மாநாட்டு மண்டபத்தில் இன்று புதன்கிழமை (16) நடைபெற்றது.

தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் பேராசிரியர் எம்.எம்.எம். நாஜிம் தலைமையில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவின் முதலாவது அமர்வில் பிரயோக விஞ்ஞான பீடத்தைச் சேர்ந்த 156 மாணவர்களும் பொறியியல் பீடத்தைச் சேர்ந்த 82 மாணவர்களும் பட்டத்தைப் பெற்றனர்.

இரண்டாவது அமர்வில் கலை கலாசார பீடத்தைச் சேர்ந்த 188 மாணவர்கள்  பட்டத்தைப் பெற்றனர்.

ஐந்து பீடங்களினதும் 988 உள்வாரிப் பட்டதாரிகள் பட்டங்களைப் பெற்றுள்ளதுடன் 22 பேர் வியாபார நிர்வாக முதுமாணிப் பட்டத்தையும், முதுகலைமாணி பட்டத்தை 03 பேருமாக பெற்று மொத்தமாக 1013 பேர் பட்டங்களைப் பெற்றனர்.

பேராதெனிய பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் எம்.ஏ. கரீம், ஓய்வு நிலை சிரேஷ்ட விரிவுரையாளர் எம்.ஐ.எம். அமீன் ஆகியோர் கௌரவ கலாநிதிப் பட்டம் வழங்கிக் கௌரவிக்கப்பட்டனர்.

இரண்டாம் நாள் அமர்வாக நாளை வியாழக்கிழமை (17) இஸ்லாமிய கற்கைகள், அரபு மொழிப் பீடத்திற்கான பட்டமளிப்பு நிகழ்வு  நடைபெறவுள்ளதுடன், பிற்பகல் முகாமைத்துவ வர்த்தக பீட பட்டதாரிகள் பட்டங்களைப் பெறவுள்ளனர்.

இதில் இஸ்லாமிய கற்கைகள் அரபு மொழிப் பீடத்தைச் சேர்ந்த 281 மாணவர்களும், வர்த்தக முகாமைத்துவ பீடத்தைச் சேர்ந்த 281 மாணவர்களும் பட்டங்களைப் பெறவுள்ளனர்.

மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, கொழும்பு தமிழ் Android Mobile App இனை, இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.

சமூக ஊடகங்களில் கொழும்பு தமிழ்:

கொழும்பு தமிழ் ஃபேஸ்புக்
கொழும்பு தமிழ் ட்விட்டர்
கொழும்பு தமிழ் இன்ஸ்டாகிராம்
கொழும்பு தமிழ் டெலிகிராம்
கொழும்பு தமிழ் யு டியூப்

Get all the Latest Sir Lanka Tamil News and Tamil World News at Colombo Tamil. You can also catch all the latest Tamil Entertainment News by following us on Twitter and Facebook. also Download Our News App in Google Play Store.

Latest Posts

சினிமா

x