Sat, Apr17, 2021

மேஷம்

ரிஷபம்

மிதுனம்

கடகம்

சிம்மம்

கன்னி

துலாம்

விருச்சிகம்

தனுசு

மகரம்

கும்பம்

மீனம்

இதையும் படிங்க

தூக்கில் தொங்கிய நிலையில் கர்ப்பிணி! மாமனார் மாமியார் மீது வழக்கு; அதிர்ச்சி சம்பவம்

30 வயதான கர்ப்பிணிப் பெண் ஒருவர் தனது வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் இந்தியாவில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

இந்திய மாநிலமான உத்திர பிரதேசத்தில் உள்ள Budhana நகரில் இந்த அதிர்ச்சியூட்டும் சம்பவம் நிகழ்ந்துள்ளது.

நிறைமாத கர்ப்பிணியாக இருந்த தபஸும் பேகம் (30) Jolla கிராமத்தில் உள்ள அவரது கணவர் Afsar வீட்டில் ஞாயிற்றுக்கிழமை தூக்கில் தொங்கிய நிலையில் கண்டெடுக்கப்பட்டார்.

திருமணமாகி கடந்த ஓராண்டாக Afsar-ன் தாய் தந்தை மற்றும் சகோதரி மூவரும் தபஸுமிடன் போதுமான வரதட்சணை கொண்டு வராததற்காக துன்புறுத்தியாதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், தபஸுமின் சகோதரர் லுக்மான், தனது சகோதரியின் மாமியார் – மாமாமனார் வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தி, பின்னர் அவளை கொன்று விட்டு, பின்னர் அவர் தற்கொலை செய்தது போல தூக்கில் தொங்கவிட்டுள்ளதாக பொலிஸில் புகார் அளித்துள்ளார்.

இந்நிலையில், Afsar, அவரது சகோதரர் அர்ஷத், தாய் தசாவர் மற்றும் தந்தை ஹஸ்ரூன் ஆகியோருக்கு எதிராக எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டு விசாரணை செய்துவருவதாக காவல்த்துறை தெரிவித்துள்ளது.

மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, கொழும்பு தமிழ் Android Mobile App இனை, இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.

சமூக ஊடகங்களில் கொழும்பு தமிழ்:

கொழும்பு தமிழ் ஃபேஸ்புக்
கொழும்பு தமிழ் ட்விட்டர்
கொழும்பு தமிழ் இன்ஸ்டாகிராம்
கொழும்பு தமிழ் டெலிகிராம்
கொழும்பு தமிழ் யு டியூப்

Get all the Latest Sir Lanka Tamil News and Tamil World News at Colombo Tamil. You can also catch all the latest Tamil Entertainment News by following us on Twitter and Facebook. also Download Our News App in Google Play Store.

தொடர்புச் செய்திகள்

ஆசிரியரிடமிருந்து மேலும் பதிவுகள்

மேலும் பதிவுகள்

பிந்திய செய்திகள்

x