துப்பாக்கி சூட்டுக்கு இலக்கான ‘பாஸ் பொட்டா’ உயிரிழப்பு

துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்றுவந்த பாதாள உலகக்குழு உறுப்பினர் “பாஸ் பொட்டா” சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளார்.

பொலிஸ் ஊடகப்பிரிவு இதனைத் தெரிவித்துள்ளது.

நேற்று முற்பகல் வழக்கு தொடர்பாக கம்பஹா நீதிமன்றத்தில் ஆஜராகியிருந்த “பாஸ் பொட்டா” என அடையாளம் காணப்பட்ட நபர் மீது இனந்தெரியாத நபர்களால் நீதிமன்ற வளாகத்தில் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டிருந்தது.