Sun, Feb28, 2021

மேஷம்

ரிஷபம்

மிதுனம்

கடகம்

சிம்மம்

கன்னி

துலாம்

விருச்சிகம்

தனுசு

மகரம்

கும்பம்

மீனம்

இதையும் படிங்க

திருமண இணையதளத்தில் சந்தித்த நபரால் ஏற்பட்ட டிவி நடிகைக்கு ஏற்பட்ட விபரீதம்

பிரபல டிவி நடிகை ஒருவர் திருமண இணையதளத்தில் சந்தித்த நபரால் பாலியல் வன்புணர்வு செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மும்பை பொலிஸார் இது பற்றி வழக்கு பதிவு செய்துள்ளனர்.

மும்பையை சேர்ந்த டிவி நடிகை ஒருவர் சென்ற வருடம் திருமண இணையதளத்தில் தளத்தில் 33 வயதாகும் விமானி ஒருவரை கடந்த டிசம்பரில் சந்தித்து இருக்கிறார். அவர் நடிகையை திருமணம் செய்து கொள்வதாக கூறி இருக்கிறார்.

இருவரும் போனில் அடிக்கடி பேசி வந்திருக்கின்றனர். மேலும் சமூக வலைத்தளங்களிலும் சேட் செய்திருக்கிறார் அந்த நபர். போபாலை சேர்ந்த அவர் மும்பையில் தற்போது தங்கி இருக்கிறார்.

ஒரு நாள் நடிகையை அவர் சந்திக்க விரும்புவதாக கூறி இருக்கிறார். அவரையும் வீட்டையும் பார்க்க விரும்புவதாக அவர் கூறிய நிலையில் கடந்த 10 தினங்களுக்கு முன்பு அவரை வீட்டிற்கு அந்த நடிகை அழைத்து இருக்கிறார்.

நடிகை மும்பையில் தனியாக வசித்து வருவதால் சம்பவம் நடந்தபோது வீட்டில் யாரும் இல்லை. அந்த நபர் வீட்டிற்கு வந்து இவரை பாலியல் வன்புணர்வு செய்திருக்கிறார்.

திருமணம் செய்துகொள்வதாகவும், உன்னை போபாலில் இருக்கும் பெற்றோரிடம் அழைத்து சென்று திருமணத்திற்கு சம்மதிக்க வைப்பதாகவும் கூறி இருக்கிறார் அந்த நபர்.

ஆனால் மறுநாள் இருந்து நடிகையை அழைப்பை அவர் எடுப்பதில்லை. இதனால் அதிர்ச்சியான டிவி நடிகை உடனே பொலிஸாரிடம் புகார் அளித்திருக்கிறார். இது தொடர்பாக மும்பை பொலிஸார் கடந்த வாரம் FIR பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

விரைவில் நடிகையை ஏமாற்றி பாலியல் வன்புணர்வு செய்த பைலட் கைது செய்யப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, கொழும்பு தமிழ் Android Mobile App இனை, இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.

சமூக ஊடகங்களில் கொழும்பு தமிழ்:

கொழும்பு தமிழ் ஃபேஸ்புக்
கொழும்பு தமிழ் ட்விட்டர்
கொழும்பு தமிழ் இன்ஸ்டாகிராம்
கொழும்பு தமிழ் டெலிகிராம்
கொழும்பு தமிழ் யு டியூப்

Get all the Latest Sir Lanka Tamil News and Tamil World News at Colombo Tamil. You can also catch all the latest Tamil Entertainment News by following us on Twitter and Facebook. also Download Our News App in Google Play Store.

தொடர்புச் செய்திகள்

ஆசிரியரிடமிருந்து மேலும் பதிவுகள்

மேலும் பதிவுகள்

பிந்திய செய்திகள்

x