Thu, May13, 2021

மேஷம்

ரிஷபம்

மிதுனம்

கடகம்

சிம்மம்

கன்னி

துலாம்

விருச்சிகம்

தனுசு

மகரம்

கும்பம்

மீனம்

Latest Posts

திருப்பதியில் இலவச தரிசனத்திற்கு இன்று முதல் அனுமதி

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் இலவச தரிசனத்துக்கு பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள் என தேவஸ்தானம் அறிவித்துள்ளது

உலகப் புகழ் பெற்ற திருப்பதி ஏழுமலையான் கோயிலில் செப்டம்பர் 15 ஆம் திகதி முதல் 27 ஆம் திகதி வரை, வருடாந்திர பிரம்மோஸ்சவ ஏகாந்த திருவிழா நடைபெற உள்ளது.

இதற்காக தேவஸ்தான ஆலோசனைக் கூட்டம் திருமலையில் நடைபெற்றது. இதில், இன்று முதல் பக்தர்களை இலவச தரிசனத்துக்கு அனுமதிப்பதென முடிவு செய்யப்பட்டது.

மேலும், தேவஸ்தான செலவுகளுக்கு கோயில் வைப்பு நிதியிலிருந்து பணத்தை எடுக்க ஆந்திர அரசிடம் அனுமதி பெறுவதெனவும் முடிவெடுக்கப்பட்டது.

இதுதவிர, ஏற்கெனவே உண்டியலில் சேர்ந்துள்ள மதிப்பிழப்பு செய்யப்பட்ட 500 மற்றும் ஆயிரம் ரூபாய் நோட்டுகள் 50 கோடி ரூபாயை ரிசர்வ் வங்கியிடம் ஒப்படைப்பது குறித்து விவாதிக்கப்பட்டது.

இலவச தரிசனத்துக்கான டிக்கெட்டுகள் அந்தந்த கவுன்டர்களில் கிடைக்க ஏற்பாடு செய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

 

செய்திகளை உடனுக்குடன் TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்… https://t.me/colombotamil

Get all the Latest Sir Lanka Tamil News and Tamil World News at Colombo Tamil. You can also catch all the latest Tamil Entertainment News by following us on Twitter and Facebook. also Download Our News App in Google Play Store.

Latest Posts

சினிமா

x