Sun, Jan17, 2021

மேஷம்

ரிஷபம்

மிதுனம்

கடகம்

சிம்மம்

கன்னி

துலாம்

விருச்சிகம்

தனுசு

மகரம்

கும்பம்

மீனம்

தாய்வான் நாடாளுமன்றத்தில் பறந்த பன்றி குடல்

அமெரிக்காவுடன் தாய்வான் பல பொருளாதார ஒப்பந்தங்களை ஏற்படுத்தியுள்ளது.

தற்போது கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக சரிந்து உள்ள பொருளாதாரத்தை மீண்டும் நிலைநிறுத்த தாய்வான் ஜனாதிபதி சாய் இங் வேன் முயற்சிகள் மேற்கொண்டு வருகிறார்.

இதனைத்தொடர்ந்து கடந்த ஆகஸ்ட் மாதம் அமெரிக்காவுடன் ஓர் ஒப்பந்தத்தை மேற்கொண்டு ரேக்டோஃபாமைன் என்கிற ரசாயனம் கலந்த பன்றி இறைச்சியை அமெரிக்காவிலிருந்து ஏற்றுமதி செய்ய தாய்வான் அரசு அனுமதி வழங்கியது.

இந்த ரசாயனம் ஐரோப்பிய யூனியன் நாடுகளிலும் சீனாவிலும் சுகாதார கேடு காரணமாக தடை செய்யப்பட்டது.மேலும் இந்த ரசாயனம் கலந்த பன்றி இறைச்சி உடலுக்கு கேடு விளைவிக்கும் என மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

இதனை தாய்வானுக்கு ஏற்றுமதி செய்ய ஆளுங்கட்சி அனுமதி வழங்கியது. இதனை எதிர்க்கட்சியான குபோமின்தாங் கடுமையாக எதிர்த்தது.

இதனையடுத்து தற்போது தாய்வான் நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பன்றிகளின் குடலை கையில் எடுத்துக்கொண்டு அதனை ஆளும் கட்சி உறுப்பினர்கள்மீது வீசி தங்களது எதிர்ப்பை தெரிவித்தனர்.

இதனால் நாடாளுமன்றத்தின் தரை முழுவதும் பன்றிக் குடல்கள் சிதறிக்கிடந்தன. வித்தியாசமான முறையில் இவ்வாறு ஆளுங்கட்சியை தாய்வான் எதிர்கட்சி எதிர்ப்பது சமூக வலைதளங்களில் வைரல் ஆகியுள்ளது.

எதிர்ப்பை காட்டுவதற்கு நாடாளுமன்றத்தில் இப்படிப்பட்ட அருவருக்கத்தக்க செயல்களில் யாராவது ஈடுபடுவார்களா என்று ஆளும் கட்சி உறுப்பினர்கள் குற்றஞ்சாட்டி வருகின்றனர்.

மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, கொழும்பு தமிழ் Android Mobile App இனை, இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.

சமூக ஊடகங்களில் கொழும்பு தமிழ்:

கொழும்பு தமிழ் ஃபேஸ்புக்
கொழும்பு தமிழ் ட்விட்டர்
கொழும்பு தமிழ் இன்ஸ்டாகிராம்
கொழும்பு தமிழ் டெலிகிராம்
கொழும்பு தமிழ் யு டியூப்

Get all the Latest Sir Lanka Tamil News and Tamil World News at Colombo Tamil. You can also catch all the latest Tamil Entertainment News by following us on Twitter and Facebook. also Download Our News App in Google Play Store.

Latest news

Related news