தற்கொலைக்கு முயன்ற சீரியல் நடிகை.! அதிர்ச்சியில் திரையுலகம்
சூரியப்பேட்டை மாவட்டத்தில் உள்ள மோதி காவல் நிலையத்தில் கட்டா மைதிலி தனது கணவர் மற்றும் அவரது குடும்பத்தினர் மீது புகார் அளித்துள்ளார்.

தெலுங்கு தொலைக்காட்சி துறை நடிகை கட்டா மைதிலி ஹைதராபாத்தில் வசித்து வருகிறார். இவர், ஆறு மாதங்களுக்கு முன்பு தனது கணவர் ஸ்ரீதர் ரெட்டி மற்றும் 4 பேர் மீது பஞ்சாகுட்டா காவல் நிலையத்தில் துன்புறுத்தல் காரணமாக புகார் அளித்துள்ளாராம்.
இதேபோல், சூரியப்பேட்டை மாவட்டத்தில் உள்ள மோதி காவல் நிலையத்தில் கட்டா மைதிலி தனது கணவர் மற்றும் அவரது குடும்பத்தினர் மீது புகார் அளித்துள்ளார்.
ஆனால், இது குறித்து எந்தவித நடவெடிக்கையும் எடுக்காத நிலையில், நடிகை கட்டா மைதிலி தூக்க மாத்திரைகளை அளவுக்கு அதிகமாக எடுத்துகொண்டு தற்கொலைக்கு முயன்ற சம்பவம் திரையுலகம் மற்றும் தொலைக்காட்சி வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், பஞ்சாகுட்டா காவல் நிலையத்திற்கு நடிகை பற்றிய தகவல் கிடைத்ததும், அவரது நெட்வொர்க் கேரியரில் இருந்து அவரது தொலைபேசி சிக்னலைக் கண்டுபிடித்து அப்பகுதியில் உள்ள அவரது வீட்டிற்கு சென்றதாக கூறப்படுகிறது.
அவர்கள் மைதிலி மயக்கமடைந்ததைக் கண்டறிந்ததையடுத்து, அவரது அருகில் தூக்க மாத்திரைகளுடன் பிரீசர்ஸ் எனப்படும் மதுபானத்தை 8 பாட்டில்கள் இருப்பதையும் கண்டறிந்தனர்.இதனை தொடர்ந்து, அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதற்கிடையில், நடிகையின் தற்கொலை முயற்சியில் அவரது கணவர் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு தொடர்பு உள்ளதா அல்லது வேறு ஏதேனும் காரணம் உள்ளதா என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் Colomboதமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். JOIN NOW |