சிவாஜி

தமிழ் சினிமாவின் அசைக்க முடியாத ஆளுமை சிவாஜி கணேசன்!

‘’திருவிளையாடல்’ படம் வந்திருந்த நேரம். குடும்பத்தோட படம் பார்க்க போயிருந்தோம். படம் முடிஞ்சு வீட்டுக்கு வந்தாச்சு. மறுநாள் கோயிலுக்கு போயிருந்தோம்.

என்னோட பத்து வயசு மகன், ’சிவாஜிக்கு ஏம்பா இப்படி சிலை வச்சிருக்காங்க?’ன்னு கேட்டான். ’எங்கடா?’ன்னு கேட்டேன். அவன் சிவலிங்கத்தைக் காண்பிச்சான். ’டேய், இது சாமி’ன்னு சொன்னேன். சிவாஜிதானே சிவன் அப்படின்னு கேட்டான்? அவனுக்குப் புரிய வைக்கிறதுக்குள்ள பெரும்பாடா போச்சு?’’

பழம்பெரும் நடிகர் ஒருவர், சிவாஜி பற்றி பேசும்போது இப்படிச் சொன்னார் ஒரு முறை. அவர் சொன்னது போல, சிவனாகவும் நாரதராகவும் கர்ணனாகவும் கப்பலோட்டிய தமிழனாகவும் கட்டபொம்மனாகவும் நமக்கு காட்சி தந்தவர் சிவாஜி கணேசன்.

Read Also -> வைத்தியசாலை பதவி வெற்றிடங்களை நிரப்ப நடவடிக்கை

கட்டபொம்முவையும் கர்ணனையும் கப்பலோட்டிய தமிழனையும் நேரில் காணாதவர்கள் அப்படித்தானே நினைவில் நிறுத்திக்கொள்ள முடி யும். தமிழ் சினிமாவின் அசைக்க முடியாத அந்த ஆளுமைக்கு இன்று 91 வது பிறந்த நாள்!

அவர் போட்டு கொடுத்த பாதையில்தான் இன்றைய நடிகர்கள், நடிப்பைத் தொடர்கிறார்கள். அவர் பேசும் வசனத்தைபோல, கண்ணாடி முன் நின்று பயிற்சிப் பெற்ற நடிகர்கள் ஏராளம். அது வெறும் பயிற்சிதானே தவிர, சிவாஜிக்கு நிகர் சிவாஜிதான்.

’அவர் நடிப்புச் சக்கரவர்த்தி, அவர் போல் நடிக்க முடியுமா? எந்த படத்துலயும் அவரை கேரக்டராகத்தான் பார்க்க முடியும்’ என இன்னும் சொல்லிக்கொண்டிருப்பது, நெருப்பு சுடும் என்று சொல்வதைப் போலதான். ஏனென்றால் சிவாஜி என்றால் நடிப்பு, நடிப்பு என்றால் சிவாஜி!

270 தமிழ்ப் படங்களில் நடித்திருக்கிற சிவாஜி, 9 தெலுங்கு படங்களிலும் 2 இந்தி படங்களிலும், மலையாளத்தில் ஒரு படத்திலும் நடித்திருக்கி றார். இவர் நடித்த பல படங்கள், தமிழ் சினிமாவின் வைரங்கள். அவை, சில நடிப்பு பள்ளிகளில் பாடமாகவும் வைக்கப்பட்டிருக்கின்றன.

Read Also -> நோயாளி பெருங்குடலில் சிக்கிய இரும்பு டம்ளர்

அவரது நடிப்பை மிகை நடிப்பு என்று சொல்பவர்களும் உண்டு. ஆதரவு என்று இருந்தால் எதிர்ப்பும் இருக்கத்தானே செய்யும். மிகை நடிப்பு என்பதையும் அப்படித்தான் எடுத்துக்கொள்ள வேண்டும்.

அவரும் எம்.ஜி.ஆரும் சினிமாவில் சமகாலத்தில் பயணித்தாலும் இரண்டு பேருக்கும் வெவ்வேறு கதைகளும் வெவ்வேறு எதிர்பார்ப்புகளும் இருந்தன. இரண்டு பேருக்கும் பெரும் புகழ் இருந்தது.

ஆனால், எம்.ஜி.ஆர் நடிப்பில் இருந்து அரசியலுக்கு மாறி வென்றார். சிவாஜி, அரசியலி ல் தோற்றார். அதில் தோற்றிருந்தாலும் ஏராளமான ரசிகர்களின் நெஞ்சங்களில் இன்னும் சிம்மாசனம் போட்டு உட்கார்ந்திருக்கிறார் அந்த நடிப்புத் தெய்வம்!

அண்ணா எழுதிய ’சிவாஜி கண்ட இந்து ராஜ்யம்’ என்ற நாடகத்தில் சத்ரபதி சிவாஜியாக நடித்த இவரது நடிப்பைக் கண்டு வியந்த பெரியார், ‘சிவா ஜி’ என்று அழைத்தார் கணேசனை! பெரியார் அன்று உச்சரித்த அந்த பெயர்தான், தமிழ் சினிமா வரலாற்றில், தவிர்க்க முடியாத, மறக்க முடி யாத, மறைக்க முடியாத பெயராக நிலைத்திருக்கிறது.

Total
0
Shares
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Previous Article

ஆலீஸன் மற்றும் ஹோஞ்ஜோவுக்கு மருத்துவத்துக்கான நோபல் பரிசு

Next Article
வன்கொடுமை

மாணவியுடன் குடும்பம் நடத்திய 18 வயது இளைஞன்

Related Posts
Read More

தொழிலதிபருடன் திடீர் காதல்.. சர்கார் பட நடிகை ரகசிய திருமணம்

விஸ்வாசம், சர்கார் படங்களில் நடித்துள்ள பிரபல நடிகை, தொழிலதிபரை திருமணம் செய்துகொண்டார். பிரபல நடிகை பாப்ரி கோஷ். மேற்கு வங்கத்தைச் சேர்ந்த அவர், பெங்காலி…
ரஜினிகாந்த்
Read More

அரசியல் களம் காணும் ரஜினிகாந்த்? – இறுதி முடிவெடுக்க நாளை ஆலோசனை!!

அரசியல் களம் காணும் ரஜினிகாந்த்? – இறுதி முடிவெடுக்க நாளை ஆலோசனை!! நடிகர் ரஜினிகாந்த தனது மக்கள் மன்ற நிர்வாகிகளுடன் நாளை (நவம்பர் 30)…
ரேணு தேசாய்
Read More

காதலில் ஏமாற்றப்பட்டேன்.. பிரபல ஹீரோவின் முன்னாள் மனைவி திடுக்!

காதலில் இருக்கும்போது தான் ஏமாற்றப்பட்டதாக பிரபல ஹீரோவின் முன்னாள் மனைவி கூறியுள்ளார். தமிழில், செல்வா இயக்கத்தில், பிரபுதேவா, பார்த்திபன், கவுசல்யா நடித்த ஜேம்ஸ்பாண்டு படத்தில்…
Read More

இயக்குனர் ‘சிறுத்தை’ சிவா தந்தை உடல் நலக்குறைவால் மரணம்

இயக்குனர் சிறுத்தை சிவாவின் தந்தை, உடல் நலக்குறைவு காரணமாக நேற்று உயிரிழந்தார். கார்த்தி, தமன்னா நடித்த சிறுத்தை படம் மூலம் இயக்குனர் ஆனவர் சிவா.…
Total
0
Share