Sun, Feb28, 2021

மேஷம்

ரிஷபம்

மிதுனம்

கடகம்

சிம்மம்

கன்னி

துலாம்

விருச்சிகம்

தனுசு

மகரம்

கும்பம்

மீனம்

இதையும் படிங்க

தகாத உறவு… டிவி நடிகர் கொலை: கைதான இலங்கை அகதி வாக்குமூலம்

தொலைக்காட்சி நடிகர் ஒருவர் கொலை செய்யப்பட்ட நிலையில், அடுத்த நாள் இது தொடர்பாக எம்.ஜி.ஆர் நகர் காவல்துறையினர் 30 வயது நபரை கைது செய்தனர்.

அந்த நபர் விருதுநகரைச் சேர்ந்த விஜயக்குமார் என்றும், அவரது மனைவி நடிகர் செல்வரத்தினத்துடன் தகாத உறவு கொண்டிருந்ததாகவும், விசாரணையில் தெரிய வந்திருக்கிறது.

சனிக்கிழமை, செல்வரத்தினம் படப்பிடிப்புக்குச் செல்லவில்லை, உதவி இயக்குநரான நண்பர் மணியுடன் தங்கியிருந்தார். ஞாயிற்றுக்கிழமை அதிகாலையில், அவருக்கு ஒரு தொலைபேசி அழைப்பு வந்ததும், அங்கிருந்து கிளம்பியிருக்கிறார்.

பின்னர், அண்ணா நெடும்பாதையில் அடையாளம் தெரியாத நபர்களால் நடிகர் வெட்டிக் கொல்லப்பட்டது மணிக்கு தெரிய வந்திருக்கிறது.

கணவர் கொலை செய்ய சென்னை வந்துக் கொண்டிருக்கிறார் என விஜயகுமாரின் மனைவியிடமிருந்து செல்வரத்தினத்துக்கு அழைப்பு வந்தது விசாரணையில் தெரியவந்துள்ளது.

இருப்பினும், அவரது எச்சரிக்கையை புறக்கணித்த செல்வரத்தினம், விஜயக்குமாரை சமாளிப்பதாக கூறியிருக்கிறார்.

இறந்தவர் மற்றும் குற்றம் சாட்டப்பட்டவர்கள் இருவரும் இலங்கை அகதிகள் என்றும், செல்வரத்தினம் விஜயகுமாரின் மனைவியுடன் எட்டு மாதங்களுக்கு முன்பு உறவை வளர்த்துக் கொண்டதாகவும் தெரிவித்தனர்.

இது பற்றி விஜயகுமாருக்கு தெரிய வர, செல்வரத்தினத்திடம் இருந்து விலகி இருக்குமாறு மனைவியை எச்சரித்துள்ளார். ஆனால் இதை அவரது மனைவி ஏற்காமல், செல்வரத்தினத்துடன் நேரத்தை செலவிட அடிக்கடி புதுச்சேரிக்குச் சென்றிருக்கிறார்.

இதனால் அவரை தீர்த்துக் கட்ட முடிவு செய்திருக்கிறார் விஜயகுமார். இதையடுத்து அவர் திங்கள்கிழமை நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டார்.

(Indianexpress)

மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, கொழும்பு தமிழ் Android Mobile App இனை, இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.

சமூக ஊடகங்களில் கொழும்பு தமிழ்:

கொழும்பு தமிழ் ஃபேஸ்புக்
கொழும்பு தமிழ் ட்விட்டர்
கொழும்பு தமிழ் இன்ஸ்டாகிராம்
கொழும்பு தமிழ் டெலிகிராம்
கொழும்பு தமிழ் யு டியூப்

Get all the Latest Sir Lanka Tamil News and Tamil World News at Colombo Tamil. You can also catch all the latest Tamil Entertainment News by following us on Twitter and Facebook. also Download Our News App in Google Play Store.

தொடர்புச் செய்திகள்

ஆசிரியரிடமிருந்து மேலும் பதிவுகள்

மேலும் பதிவுகள்

பிந்திய செய்திகள்

x