Mon, Jan18, 2021

மேஷம்

ரிஷபம்

மிதுனம்

கடகம்

சிம்மம்

கன்னி

துலாம்

விருச்சிகம்

தனுசு

மகரம்

கும்பம்

மீனம்

இதையும் படிங்க

தகவல் வழங்கியவருக்கு அச்சுறுத்தல்; தேவைப்பட்டாலே அழைப்பாணை

சாய்ந்தமருது தற்கொலைத் தாக்குதலில் சம்பந்தப்பட்டவர் எனக் கூறப்படும் “சாரா” என்ற புலஸ்தினி உயிருடன் உள்ளார் எனவும் அவரைத் தான் கண்டதாகவும் தகவல் வழங்கிய நபருக்கு, இனந்தெரியாதவர்கள் அச்சுறுத்தல் விடுப்பதாக, கல்முனை நீதவானின் கவனத்துக்குக் கொண்டுவரப்பட்ட வழக்கு விசாரணைக்கு தேவை ஏற்படின் குறித்த நபருக்கு அழைப்பு விடுக்கப்படுமென, கல்முனை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்த வழக்கு, கல்முனை நீதவான் ஐ.என்.றிஸ்வான் முன்னிலையில் நேற்று திங்கட்கிழமை (19) எடுத்துக்கொள்ளப்பட்டது.

இதன் போது, கடந்த தவணையில் அச்சுறுத்தல் தனக்கு விடுக்கப்பட்டதாக தெரிவித்து வாக்குமூலம் வழங்கிய நபர் ஆஜராகவில்லை. அவர் சார்பாக சட்டத்தரணி ஆஜராகி இருந்தார்.

இந்நிலையில், விசாரணைகளை ஆராய்ந்த நடத்திய நீதவான், எதிர்வரும் தவணைகளில் வாக்குமூலம் வழங்கிய நபர் ஆஜராக தேவையில்லை எனவும் தேவை ஏற்படின் அழைப்பாணை வழங்கப்படும் எனக் குறிப்பிட்டு, நவம்பர் மாதம் 2 ஆம் திகதிக்கு வழக்கை ஒத்திவைத்தார்.

இது தவிர, இந்த வழக்குக்காக ஆஜராகிய சட்டத்தரணியை தொலைபேசி ஊடாக அச்சுறுத்திய நபரை அடையாளம் காண்பதற்காக, தனியார் தொலைபேசி நிறுவனத்தின் ஒத்துழைப்பைப் பெற்றுக்கொள்வதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதுடன், இவ்விடயம் தொடர்பான வழக்கு, நவம்பர் மாதம் 23ஆம் திகதிக்கு விசாரணைக்காக எடுக்கப்படவுள்ளiம குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, கொழும்பு தமிழ் Android Mobile App இனை, இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.

சமூக ஊடகங்களில் கொழும்பு தமிழ்:

கொழும்பு தமிழ் ஃபேஸ்புக்
கொழும்பு தமிழ் ட்விட்டர்
கொழும்பு தமிழ் இன்ஸ்டாகிராம்
கொழும்பு தமிழ் டெலிகிராம்
கொழும்பு தமிழ் யு டியூப்

Get all the Latest Sir Lanka Tamil News and Tamil World News at Colombo Tamil. You can also catch all the latest Tamil Entertainment News by following us on Twitter and Facebook. also Download Our News App in Google Play Store.

தொடர்புச் செய்திகள்

ஆசிரியரிடமிருந்து மேலும் பதிவுகள்

மேலும் பதிவுகள்

பிந்திய செய்திகள்