ட்ரம்ப்புக்கு எச்சரிக்கை விடுத்த ஃபேஸ்புக் நிறுவனர்

”அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் உள்பட பெரிய அரசியல் தலைவர்களும் ஃபேஸ்புக் வரம்புக்கு உட்பட்டுதான் பதிவுகளை இடவேண்டும். அப்படிப்பட்ட வன்முறையைத் தூண்டும் பதிவுகளைக் களைய நடவடிக்கை எடுக்கப்படும்” என்று மார்க் ஜுக்கர்பெர்க் தெரிவித்துள்ளார்.

சமூக வலைதளமான ஃபேஸ்புக்கில் இனவெறி, வன்முறையைத் தூண்டும் வகையில் இருக்கும் செய்திகளுக்கு தடை விதிக்க வேண்டும் என தொடர்ந்து கோரிக்கைகள் வலுத்து வருகின்றன.

இந்த நிலையில் இதை சுட்டிக்காட்டி கோககோலா நிறுவனம் ஃபேஸ்புக் விளம்பரங்களை வரும் 30 நாட்களுக்கு நிறுத்துவதாக அறிவித்துள்ளது.

இதேபோல வெரிசான் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனம் ஃபேஸ்புக்கில் விளம்பரம் தருவதை நிறுத்திவிட்டது. இதனால் ஃபேஸ்புக் நிறுவனம் பல கோடி ரூபாய் இழப்பைச் சந்தித்துள்ளது.

இந்த நிலையில் ஃபேஸ்புக்கில் வெறுப்பு பேச்சுகள் உள்ளிட்ட விதிமுறைகளுக்கு எதிரான பதிவுகள் களையப்படும் என அந்நிறுவனத்தின் தலைவர் மார்க் ஜுக்கர்பெர்க் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் “ஃபேஸ்புக்கில் போலி செய்திகள், மிரட்டல்கள், தவறான தகவல்கள் மற்றும் வெறுப்பு பேச்சுகள் ஆகியவை களையப்படும்.
மேலும் போலியான கணக்குகள் மூலம் சமுதாயத்துக்கு சீர்கேடு விளைவிக்கும் பதிவுகளை இடுவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும்“ எனத் தெரிவித்துள்ளார்.

அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் உட்பட பெரிய அரசியல் தலைவர்களும் ஃபேஸ்புக் வரம்புக்கு உட்பட்டுதான் பதிவுகளை இட வேண்டும். அவர்களுக்கு எந்தவித சலுகையும் கிடையாது என்றும் அவர் கூறியுள்ளார்.

செய்திகளை உடனுக்குடன் TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்… https://t.me/colombotamil

Get all the Latest Sir Lanka Tamil News and Tamil World News at Colombo Tamil. You can also catch all the latest Tamil Entertainment News by following us on Twitter and Facebook. also Download Our News App in Google Play Store.

Total
0
Shares
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Previous Article

கொடூர கணவனால் மனைவி எடுத்த விபரீத முடிவு

Next Article

கொரோனாவின் பிறப்பிடம் சீனா இல்லையாம்? வெளியானது புதிய தடயங்கள்!

Related Posts
Read More

விவசாயிகள் பேரணி : டெல்லி எல்லைகள் மூடப்பட்டன; போக்குவரத்துக்கு அனுமதி மறுப்பு

விவசாயிகள் நலனை காக்கும் நோக்கில் இந்திய மத்திய அரசு கொண்டு வந்த 3 வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்தும், அவற்றை வாபஸ் பெற வலியுறுத்தியும்…
இன்றைய ராசி பலன்கள்
Read More

இந்த ராசிக்காரர்கள் இன்று சிக்கனமாக செலவு செய்வது நல்லது!

ஒவ்வொரு நாளும் ஏற்படக்கூடிய நல்லது கெட்டதுகளை முன்கூட்டியே தெரிந்து கொண்டால் அதற்கேற்க அவற்றை சுலபமாக கையாளலாம் அல்லவா? அதற்காக தான் ராசிபலன் உதவுகிறது. டிசம்பர்…
Read More

தொழிலதிபருடன் திடீர் காதல்.. சர்கார் பட நடிகை ரகசிய திருமணம்

விஸ்வாசம், சர்கார் படங்களில் நடித்துள்ள பிரபல நடிகை, தொழிலதிபரை திருமணம் செய்துகொண்டார். பிரபல நடிகை பாப்ரி கோஷ். மேற்கு வங்கத்தைச் சேர்ந்த அவர், பெங்காலி…
Total
0
Share