டோனியால்தான் என்னுடைய இடத்தை இழந்தேன்: தினேஷ் கார்த்திக் அதிரடி

0

டோனி என்ற ஜாம்பவானால்தான் டெஸ்ட் அணியில் என்னுடைய இடத்தை இழந்தேன் என்று தினேஷ் கார்த்திக் கூறியுள்ளார்.

‘‘நான் அறிமுகமாகிய தொடக்கத்தில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை. மேலும் தொடர்ச்சியாக என்னுடைய ஆட்டம் நன்றாக அமையவில்லை.

அப்போது கடுமையான போட்டி நிலவியது. அந்த நேரத்தில் எம்எஸ் டோனி என்று அழைக்கப்பட்டவர் என்னுடைய கழுத்தை அழுத்தி மூச்சுவிட முடியாமல் செய்து விட்டார்.

அந்த நேரத்தில் உலகக் கிரிக்கெட்டில் ஒரு பரபரப்பை ஏற்படுத்தி விட்டார். அதன்பின் டோனி இந்தியாவின் தலைசிறந்த அணி தலைவர்களில் ஒருவராக மாறிவிட்டார்.

87 டெஸ்ட் போட்டி இடைவெளிக்குப்பின் இந்திய அணியில் மீண்டும் இடம் பிடித்துள்ளேன். நான் என்னுடைய இடத்தை ஒரு சாதாரண வீரரிடம் இழக்கவில்லை.

டோனி என்ற ஜாம்பவானிடம் இழந்துள்ளேன். நான் அவருக்கு மதிப்பு அளிக்கிறேன். அந்த நேரத்தில் என்னுடைய சிறப்பான ஆட்டத்தை நான் போதும் அளவிற்கு வெளிப்படுத்தவில்லை. தற்போது எனக்கு மற்றொரு வாய்ப்பு கிடைத்துள்ளது. என்னுடைய சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்த முயற்சி செய்வேன்’’ என்றார்.

[penci_related_posts taxonomies=”undefined” title=”இதைப் படிக்கலைனா படிச்சிருங்க ப்ளீஸ்” background=”” border=”” thumbright=”no” number=”2″ style=”grid” align=”none” displayby=”recent_posts” orderby=”random”]

Website – www.colombotamil.lk

Facebook – http://www.facebook.com/TheColomboTamil

Twitter – www.twitter.com/TheColomboTamil

Instagram – www.instagram.com/TheColomboTamil

Contact us – info@colombotamil.lk

#TamilNews, #SriLanka, #Colombo, #lka #LkNews #TamilSportsNews, TamilCinemaNews

Get real time updates directly on you device, subscribe now.

Leave A Reply

Your email address will not be published.

x