டி20 உலகக்கிண்ணம்: பங்களாதேஷை 150 ரன்களில் சுருட்டியது சிம்பாப்வே!

ICC T20 World Cup: டி20 உலகக்கோப்பை தொடரில் சூப்பர் 12 ஆட்டத்தில் இன்று குரூப் 2 உள்ள அணிகளுக்கான போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன.

டி20 உலகக்கிண்ணம்: பங்களாதேஷை 150 ரன்களில் சுருட்டியது சிம்பாப்வே!

ICC T20 World Cup: டி20 உலகக்கோப்பை தொடரில் சூப்பர் 12 ஆட்டத்தில் இன்று குரூப் 2 உள்ள அணிகளுக்கான போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன. 

இதில் பிரிஸ்பேனிலுள்ள கபா கிரிக்கெட் மைதானத்தில் பங்களாதேஷ் - சிம்பாப்வே அணிகள் பலப்பரீட்சை நடத்தி வருகின்றன.

இப்போட்டியில் டாஸ் வென்ற பங்களாதேஷ் அணி முதலில் பேட்டிங் செய்வதாக தீர்மானித்தது. அதன்படி அந்த அணிக்கு நஜ்முல் ஹொசைன் - சௌமியா சர்க்கார் ஆகியோர் தொடக்க வீரர்களாக களமிறங்கினர்.

ஆனால் ஆட்டத்தின் இரண்டாவது ஓவரை வீசிய பிளெசிங் முசரபாணி, ரன் ஏதுமின்றி களத்தில் இருந்த சௌமியா சர்காரின் விக்கெட்டைக் கைப்பற்றி அசத்தினார். அதன்பின் களமிறங்கிய லிட்டன் தாஸ் 14, கேப்டன் ஷாகிப் அல் ஹசன் 23 ரன்கள் என அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர். 

மறுமுனையில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த நஜ்முல் ஹொசைன் அரைசதம் கடந்து அசத்தினார். அரைசதம் கடந்த பின் அதிரடி ஆட்டத்தை கையிலெடுத்து நஜ்முல் ஹொசைன் அடுத்தடுத்து பவுண்டரியும், சிக்சர்களுமாக விளாசினார்.

இதன்மூலம் 20 ஓவர்கள் முடிவில் பங்களாதேஷ்  அணி 7 விக்கெட்டுகளை இழந்து 150 ரன்களை மட்டுமே எடுத்தது. சிம்பாப்வே அணி தரப்பில் நகர்வா, பிளெசிங் முசரபானி தலா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.