டி20 உலகக்கிண்ணம் : நியூசிலாந்தை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு பாகிஸ்தான் தகுதி

ICC T20 World Cup: நியூசிலாந்து அணிக்கு எதிரான முதலாவது அரையிறுதிப் போட்டியில் பாகிஸ்தான் அணி 7 விக்கட்டுக்களால் வெற்றி பெற்றுள்ளது.

டி20 உலகக்கிண்ணம் : நியூசிலாந்தை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு பாகிஸ்தான் தகுதி

ஆஸ்திரேலியாவில் நடைபெற்றுவரும் எட்டாவது டி20 உலகக்கிண்ணம் தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. 

நியூசிலாந்து அணிக்கு எதிரான முதலாவது அரையிறுதிப் போட்டியில் பாகிஸ்தான் அணி 7 விக்கட்டுக்களால் வெற்றி பெற்றுள்ளது.

நாணய சுழற்சியில் வெற்றிபெற்று முதலில் துடுப்பெடுத்தாடிய நியூசிலாந்து அணி 20 ஓவர்கள் நிறைவில் 4 விக்கட்டுக்களை இழந்து 152 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

இதனையடுத்து, 153 என்ற வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் அணி 19.1 ஓவர்கள் நிறைவவில் 3 விக்கட்டினை மாத்திரம் இழந்து வெற்றி இலக்கை அடைந்தது.

இதனையடுத்து, டி20 உலகக்கிண்ண கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டிக்கு பாகிஸ்தான் அணி தெரிவாகியுள்ளது.

நாளைய இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது அரையிறுதிப் போட்டி நடைபெறவுள்ளது.