ஜப்பானை இன்று மீண்டும் தாக்கிய ட்ராமி சூறாவளியால் 50 பேர் காயமடைந்துள்ளனர்.
அத்துடன், ட்ராமி சூறாவளி காரணமாக கடும் காற்று, மழை மற்றும் மண்சரிவு ஏற்படக்கூடும் என, அந்நாட்டு வானிலை அவதான நிலையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
மேலும், சூறாவளி காரணமாக ஜப்பானின் போக்குவரத்து சேவையில் தடங்கல் ஏற்பட்டுள்ளது.
அதிவேக புகையிரத சேவைகள் தடைசெய்யப்பட்டுள்ளதுடன், ஆயிரத்துக்கும் அதிகமான விமானச் சேவைகள் தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டுள்ளன.