Tue, Mar9, 2021

மேஷம்

ரிஷபம்

மிதுனம்

கடகம்

சிம்மம்

கன்னி

துலாம்

விருச்சிகம்

தனுசு

மகரம்

கும்பம்

மீனம்

இதையும் படிங்க

டிசம்பர் 3 ஆம் திகதி ரிலீஸ் ஆகும் சசிகலா? – உச்சக்கட்ட பரபரப்பில் தமிழக அரசியல் களம்

சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று சிறையில் இருக்கும் சசிகலாவின் விடுதலை குறித்த புதிய தகவல் வெளியாகியுள்ளது.

வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோருக்கு 4 வருட சிறை தண்டனையும், ரூ 10.10 கோடி அபராதமும் விதித்து உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்திருந்தது.

இதில் ஜெயலலிதா 2016 ஆம் ஆண்டு காலமானார். எஞ்சிய 3 பேரும் தற்போது பரப்பன அக்ரஹாராவில் சிறை தண்டனை அனுபவித்து வருகின்றனர்.

இந்நிலையில் சமீபத்தில் சசிகலா தரப்பில் 10.10 கோடி அபராதத்தொகை கட்டப்பட்டது. மேலும் சிறை நன்னடத்தை விதிகள் காரணமாக அவர் எந்த நேரத்திலும் விடுதலை செய்யப்படலாம் என்ற தகவலும் வெளியானது. இந்த நிலையில் அவரின் விடுதலை குறித்த புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஜெயலலிதாவுக்கு வரும் டிசம்பர் 5 ஆம் திகதி 4வது ஆண்டு நினைவு தினம் அனுசரிக்கப்படுகிறது. அதற்கு முன்னதாக தான் விடுதலையாக வேண்டும் என சசிகலா விரும்புவதாக கூறப்படுகிறது.

அவரின் விடுதலை குறித்த அறிவிப்பை சிறைத்துறையும் வாய்மொழியாக தெரிவித்துள்ளதாம். அதேசமயம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் பட்சத்தில் மட்டுமே உண்மை நிலவரம் தெரிய வரும்.

சசிகலா விடுதலையானால் அரசியல் களத்தில் தனது அடுத்த கட்டத்தினை தொடங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் தமிழக அரசியல் களம் மீண்டும் பரபரப்பாகியுள்ளது.

 

மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, கொழும்பு தமிழ் Android Mobile App இனை, இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.

சமூக ஊடகங்களில் கொழும்பு தமிழ்:

கொழும்பு தமிழ் ஃபேஸ்புக்
கொழும்பு தமிழ் ட்விட்டர்
கொழும்பு தமிழ் இன்ஸ்டாகிராம்
கொழும்பு தமிழ் டெலிகிராம்
கொழும்பு தமிழ் யு டியூப்

Get all the Latest Sir Lanka Tamil News and Tamil World News at Colombo Tamil. You can also catch all the latest Tamil Entertainment News by following us on Twitter and Facebook. also Download Our News App in Google Play Store.

தொடர்புச் செய்திகள்

ஆசிரியரிடமிருந்து மேலும் பதிவுகள்

மேலும் பதிவுகள்

பிந்திய செய்திகள்

x