டிக் டாக்கில் விஷம் குடிப்பது போல் வீடியோ வெளியிட்ட இளம்பெண் பலி

0

வெளிநாட்டில் உள்ள கணவர் திட்டியதால் மனமுடைந்து விஷம் குடிப்பது போல டிக்டாக்கில் வீடியோ வெளியிட்ட இளம்பெண் உயிரிழந்த சம்பவம் பெரம்பலூர் அருகே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சிறியவர் முதல் பெரியவர்கள் வரை தற்போது டிக்டாக் மோகம் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. ஆண்களை காட்டிலும் பெண்களே அதிக அளவில் வீடியோக்களை பதிவேற்றம் செய்து வருகிறார்கள்.

சில வீடியோக்கள் ரசிக்க வைத்தாலும், பல வீடியோக்கள் முகம் சுளிக்க வைக்கும் விதமாக இருக்கிறது.

டிக்டாக் மோகம் இரண்டு குழந்தைகளுக்கு தாயின் உயிரை பறித்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பெரம்பலூர் மாவட்டம் சீராநத்தம் கிராமத்தை சேர்ந்த பழனி என்பவரின் மனைவி அனிதா டிக்டாக் வீடியோ வெளியிடுவதில் அதிக ஆர்வம் கொண்டிருந்துள்ளார்.

ஒரு கட்டத்தில் குழந்தைகளை கூட கவனிக்காமல் அதிலேயே மூழ்கி இருந்ததாக கூறப்படுகிறது. டிக் டாக்கில் நடனமாடுவது, பாடல் பாடுவது என தொடர்ந்து வீடியோக்களை வெளியிட்டு வந்துள்ளார்.

இவரது செயல்பாடுகள் குறித்து பழனிவேலுக்கு அவரின் உறவினர்கள் தகவல் கொடுத்தனர். இதையடுத்து ஆத்திரத்தில் அனிதாவை தொலைபேசியில் கடுமையாக திட்டியுள்ளார் பழனிவேலு.

இதனால் மனமுடைந்த அனிதா தற்கொலை செய்துகொள்ள முடிவு செய்து பூச்சி மருந்தை குடித்துள்ளார். அதனை தனது கடைசி விருப்பமாக டிக்டாக்கில் வீடியோவாக பதிவு செய்தார். சிறிது நேரத்தில் கண்கள் சொருகி அவர் மயங்கி விழுவதும் வீடியோவில் பதிவாகியுள்ளது.

அதன்பின் அக்கம்பக்கத்தின் அவரை அரியலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். ஆனால், சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்துள்ளார்.

Get real time updates directly on you device, subscribe now.

Leave A Reply

Your email address will not be published.

x