Sat, Apr17, 2021

மேஷம்

ரிஷபம்

மிதுனம்

கடகம்

சிம்மம்

கன்னி

துலாம்

விருச்சிகம்

தனுசு

மகரம்

கும்பம்

மீனம்

இதையும் படிங்க

டாப்ஸி, இயக்குநர் அனுராக் காஷ்யப் உள்ளிட்ட பிரபலங்களின் வீடுகளில் வருமான வரி சோதனை

நடிகை டாப்ஸி, இயக்குநர் அனுராக் காஷ்யப் உள்ளிட்ட பிரபலங்களின் வீடுகளில் வருமானவரித்துறையினர் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

இந்தி திரைப்பட தயாரிப்பாளர் மது வர்மா, விகாஷ் பேல் உள்ளிட்டோரின் வீடு, அலுவலகத்திலும் வருமானவரித்துறை சோதனை நடத்தப்படுகிறது.

நடிகை டாப்ஸி, இயக்குநர் அனுராக் காஷ்யப், தயாரிப்பாளர் மது வர்மா, விகாஷ் பேல் உள்ளிட்டோரின் வீடு மற்றும் மும்பையில் இருக்கக்கூடிய அலுவலகம் என 20க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறை சோதனை நடைபெற்று வருகின்றது.

மும்பை மற்றும் புனே நகர்களில் உள்ள 20 இடங்களில் வருமான வரி சோதனை நடைபெற்று வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

சோதனையின் முடிவில் ஆவணங்களின் அடிப்படையில் இந்த வழக்கை அடுத்தடுத்த கட்டங்களுக்கு எடுத்து செல்லவும் வருமானவரித்துறையினர் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

பாண்டோம் பிலிம்ஸ் மற்றும் குவான் ஆகிய நிறுவனங்கள் வரி ஏய்ப்பில் ஈடுபட்டதாகவும், வருவாயை மறைத்துள்ளதாகவும் வருமான வரித்துறைக்கு புகாா்கள் வந்தன.

அந்தப் புகாா்களின் அடிப்படையில் இரு நிறுவனங்களுடன் தொடர்புடைய நடிகை டாப்சி, இயக்குநர் அனுராக் காஷ்ப் ஆகியோரின் வீடுகளில் வருமான வரி சோதனை நடைபெற்றுள்ளது.

இயக்குநர் அனுராஜ் காஷ்யப், இயக்குநர் விக்ரமாதித்யா, தயாரிப்பாளர் மது மண்டேனா, விகாஷ் பால் ஆகிய நால்வரும் இணைந்து 2011-ல் பாண்டோம் ஃபிலிம்ஸ் என்கிற நிறுவனத்தைத் தொடங்கினார்கள். எனினும் கடந்த அக்டோபர் 2018-ல் இந்த நிறுவனம் மூடப்பட்டது.

மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, கொழும்பு தமிழ் Android Mobile App இனை, இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.

சமூக ஊடகங்களில் கொழும்பு தமிழ்:

கொழும்பு தமிழ் ஃபேஸ்புக்
கொழும்பு தமிழ் ட்விட்டர்
கொழும்பு தமிழ் இன்ஸ்டாகிராம்
கொழும்பு தமிழ் டெலிகிராம்
கொழும்பு தமிழ் யு டியூப்

Get all the Latest Sir Lanka Tamil News and Tamil World News at Colombo Tamil. You can also catch all the latest Tamil Entertainment News by following us on Twitter and Facebook. also Download Our News App in Google Play Store.

தொடர்புச் செய்திகள்

ஆசிரியரிடமிருந்து மேலும் பதிவுகள்

மேலும் பதிவுகள்

பிந்திய செய்திகள்

x