டயலொக் ஆசிஆட்டா மற்றும் ‘மனுசத் தெரண’இணைந்து நிவாரணம்

டயலொக் ஆசிஆட்டா மற்றும் ‘மனுசத் தெரண’ பங்குடமையில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள பிரதேசங்களில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு உதவிகள் வழங்கப்பட்டுள்ளன

தக்க சமயங்களில் தேசத்திற்கு சேவை செய்வதில் டயலொக் நிறுவனம் தொடர்ச்சியாக முன்னெடுத்து வருகின்ற முயற்சிகளின் மற்றுமொரு அங்கமாக இலங்கையின் முன்னணி தொலைதொடர்பு சேவை வழங்குனரான டயலொக் ஆசிஆட்டா, தெரண தொலைக்காட்சி அலைவரிசையுடன் இணைந்து ‘டயலொக் உடன் மனுசத் தெரண” முயற்சியின் 2 வது கட்டத்தை ஆரம்பித்து, ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்ட பிரதேசங்களில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நிவாரணம் வழங்க முன்வந்துள்ளது.

கொரோனா வைரஸ் பரவுவதற்கான அபாயத்தைக் குறைக்க அரசாங்க சுகாதார அதிகாரிகளின் ஆணைப்படி சுகாதார மற்றும் பாதுகாப்பு வழிகாட்டுதல்களின் பிரகாரம் உலர் உணவுப் பொருட்களின் கொள்வனவு, பொதியிடல் மற்றும் விநியோக நடவடிக்கைகளின் முழு செயல்முறைகளும் முன்னெடுக்கப்படுகின்றன.

 டயலொக் ஊழியர்கள் உலர் உணவு விநியோகத்தில் ஈடுபட்டுள்ள காட்சி.

இந்த உதவி வழங்கல் முயற்சியானது, நாட்டில் கொரோனா வைரஸ் முதன்முதலாக பரவிய காலகட்டத்தில் இலங்கை மக்களின் நலனுக்கு இடமளிக்கும் நோக்குடன் டயலொக் ஏற்பாடு செய்த இதே போன்ற முயற்சிகளின் தொடர்ச்சியாக அமைந்துள்ளது.

டயலொக் உடன் மனுசத் தெரண’ ‘டயலொக் உடன் சிரச லெகதுகம” டயலொக் உடன் ITN மனுசத்வயே சத்காரய’ மற்றும் ‘வசந்தம் டிவி /எஃப்.எம் மனித நேயப்பணி உடன் டயலொக்’ போன்ற உதவி முயற்சிகளின் கீழ் நாட்டில் 22 மாவட்டங்கள் மத்தியில் 400 இற்கும் மேற்பட்ட கிராமங்களில் 128,000 இற்கும் மேற்பட்ட மக்களுக்கு சுமார் 6 வாரங்களுக்கான தினசரி உலர் உணவுப் பொதிகள் விநியோகம் செய்யப்பட்டிருந்தன.

 டயலொக் ஊழியர்கள் உலர் உணவு விநியோகத்தில் ஈடுபட்டுள்ள காட்சி.

தான் செயல்படும் சமூகங்கள் மீது அக்கறை கொண்ட ஒரு வர்த்தக நிறுவனம் என்ற வகையில், சமூகங்களுக்கு மிகவும் உதவி தேவைப்படும் இக்கட்டான காலகட்டங்களில் ஒரே தேசமாக ஒன்றுபட்டு கொவிட்-19 தொற்றுநோய் நிலைமையைச் சமாளிக்கும் கூட்டு முயற்சியை வலுப்படுத்துவதற்கும் தன்னாலான அனைத்து முயற்சிகளையும் டயலொக் ஆசிஆட்டா மேற்கொண்டு வருகிறது.

மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, கொழும்பு தமிழ் Android Mobile App இனை, இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.

சமூக ஊடகங்களில் கொழும்பு தமிழ்:

கொழும்பு தமிழ் ஃபேஸ்புக்
கொழும்பு தமிழ் ட்விட்டர்
கொழும்பு தமிழ் இன்ஸ்டாகிராம்
கொழும்பு தமிழ் டெலிகிராம்
கொழும்பு தமிழ் யு டியூப்

Get all the Latest Sir Lanka Tamil News and Tamil World News at Colombo Tamil. You can also catch all the latest Tamil Entertainment News by following us on Twitter and Facebook. also Download Our News App in Google Play Store.

Total
0
Shares
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Previous Article

பிரபல தொலைக்காட்சியின் தலைமை செய்தியாளர் அதிரடி கைது.! வீட்டிற்குள் சென்று இழுத்துச் சென்றதால் பரபரப்பு!

Next Article

பெண்களின் மூளை ஆண்களை விட சுறுசுறுப்பாக செயல்படும்

Related Posts
Read More

Pelwatte Dairyயின் மற்றொரு நிலைபேறான திட்டம்

உள்நாட்டு பாலுற்பத்தித் துறையில் முன்னணி நிறுவனமாகத் திகழும் Pelwatte Dairy Industries  ,  தனது பாலுற்பத்திப் பொருட்களின் ஊடாக ஊட்டச்சத்தினை வழங்குவதற்காக மட்டுமல்லாமல், பாற்பண்ணையாளர்களுக்கும்…
Read More

சீனி விலை தொடர்பில் விசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியானது

ஒரு கிலோ கிராம் வெள்ளை சீனியின் அதிகபட்ச விலையை குறிக்கும் விசேட வர்த்தமானி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கமைய பொதிசெய்யப்பட்ட வெள்ளை சீனி ஒரு கிலோகிராம்…
முட்டை
Read More

முட்டை ஒப்பந்தத்தில் கைச்சாத்திட பேக்கரி உரிமையாளர்கள் தயக்கம்

முட்டை உற்பத்தியாளர்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தமொன்றில் கையொப்பம் இடுவதற்கு முன்னதாக மீண்டும் ஒருமுறை பேச்சுவார்த்தையில் ஈடுபடுவதற்கு அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தீர்மானித்துள்ளது. முட்டை…
Total
0
Share