டயலொக் ஆசிஆட்டா

டயலொக் ஆசிஆட்டாவின் அனுசரணையில் “Dream Music Fest”

டயலொக் ஆசிஆட்டாவின் அனுசரணையில் “Dream Music Fest” – இலங்கை இசையுடன் கூடிய இணையற்ற பயணம்

இலங்கையின் இசையின் மறக்கமுடியாத அனுபவத்தை பார்வையாளர்களுக்குக் கொண்டுவரும் Dream Music Fest, இலங்கையின் முன்னணி இணைப்பு வழங்குனரான டயலொக் ஆசிஆட்டா பிஎல்சி இன் அனுசரணையில் ஆகஸ்ட் மாதம் 23 ஆம் திகதி இலங்கை நெலும் பொகுன மகிந்த இராஜபக்ஷ திரையறங்கு வளாகத்தில் இடம்பெறவுள்ளது.

இந்நிகழ்வானது இலங்கையில் மேற்கொள்ளப்பட்ட கோவிட் – 19 முடக்கமானது தளர்த்தப்பட்ட பின்னர் அனைவரையும் ஒன்றிணைக்கும் நிகழ்வாகும்.

இந்நிகழ்வின் மூலம் மிகவும் பிரபலமான இசைக்கலைஞர்கள் மற்றும் இசைக் குழுக்களினால் வழங்கப்படும் கிழக்கு மற்றும் மேற்கத்திய இசையினை பார்வையாளர்கள் அனுபவித்திட முடியும்.

நிகழ்வானது மேலும் பலதரப்பட்ட வயது வித்தியாசங்களை சார்ந்த உள்@ர் கலைஞர்கள் மற்றும் பிரபலமான DJS> வாத்திய கலைஞர்கள் மற்றும் பாடகர்களை உள்ளடக்கியுள்ளதுடன் பல்வேறுபட்ட இரசனைகளை கொண்ட பார்வையாளர்களைக் கவரும் வகையில் இடம்பெறவுள்ளது.

பங்கேற்கவுள்ள களைஞர்களில் சிறப்பு கலைஞர்களாக சுனில் பெரேரா, பாத்திய மற்றும் சந்தேஷ், ரந்தீர் விடான உமாரா சின்ஹவன்ச, கெவின் டி அல்மெய்தா, கசுன் கல்ஹார, ஆத்மா லியானகே, சமிதா முடுங்கொட்டுவ, சங்க தினேத், சனுக விக்ரமசிங்க, லஹிரு பெரேரா, ரித்மா வீரவர்;தன் மற்றும் தனித் ஸ்ரீ ஆகியோரும் பங்கேற்கவுள்ளார்கள்.

இந்நிகழ்வின் போது அனைத்து சுகாதார மற்றும் பாதுகாப்பு விதிமுறைகளும் கடுமையாக கடைபிடிக்கப்படும். நபர்களுக்கிடையிலான நேரடி தொடர்பை முற்றாக குறைப்பதன் நோக்கமாக, டிக்கெட்டுகளை www.myticket.lk எனும் இணையத்தளத்தின் ஊடாக மட்டுமே கொள்வனவு செய்ய முடியும்.

மேலும் பங்கேற்பாளர்களின் நெரிசல்களை குறைக்கும் வகையில் நிகழ்ச்சி ஆரம்பிப்பதற்கு 2 மணி நேரத்திற்கு முன்பே நுழைவு வாயில்கள் திறக்கப்படும். நிகழ்வு இடம்பெறும் வளாகமானது சானிடையிசர் மூலம் முழுமையாக சுத்திகரிக்கப்படுவதோடு அனைத்து நுழைவாயில்களிலும் உடல் வெப்பநிலை சோதனைகள் மேற்கொள்ளப்படுவதுடன் கைகளை சுத்தம் செய்வதற்கான ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந் நிகழ்வினை Event management association, ஊடக பங்காளரான தெரண டிவி உடன் இணைந்து ஏற்பாடு செய்துள்ளதுடன், சுகாதார அமைச்சினால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது.

கோவிட் -19 தொற்றுநோயைத் தொடர்ந்து, பொழுதுபோக்குத் துறை குறிப்பிடத்தக்க நிதிசார்ந்த இழப்புகளை சந்திக்க நேரிட்டுள்ளது. Dream Music Fest இன் முக்கிய நோக்கம், பொழுதுபோக்குத் துறைக்கு தொழில்துறைக்கு புதிய உயிர் ஊட்டலையும் ஆற்றலையும் கொண்டுவருவதோடு, இலங்கையின் பொழுதுபோக்குத் துறையின் வருகையை கொண்டாடுவதற்காகவும் அதன் பார்வையாளர்களுக்கு ஒப்பிடமுடியாத இசை அனுபவத்தை அளிக்கும் புதிய தொடக்கத்தினை வழங்குவதுமே ஆகும்.

செய்திகளை உடனுக்குடன் TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்… https://t.me/colombotamil

Get all the Latest Sir Lanka Tamil News and Tamil World News at Colombo Tamil. You can also catch all the latest Tamil Entertainment News by following us on Twitter and Facebook. also Download Our News App in Google Play Store.

Total
0
Shares
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Previous Article
நித்தியை கைது

“கைலாசா நாட்டில் தங்கத்தில் கரன்சி... நித்தியானந்தாவின் அதிரடி அறிவிப்பு..

Next Article
DAILY HOROSCOPE 18th november, இன்றைய ராசிபலன் 2019 ஒக்டோபர் 15, Today Rasi Palan

இன்றைய ராசிபலன் 22.08.2020 – தொட்டது துலங்கும் நாள்!

Related Posts
Pelwatte redefining health and safety measures
Read More

கொவிட் – 19 தொற்றுநோய் காலப்பகுதியில் Pelwatteவின் முன்னெச்சரிக்கை நடவடிக்கை

புகழ்பெற்ற உள்ளூர் பாலுற்பத்தி நிறுவனமான Pelwatte Dairy, தற்போது நிலவும் கொவிட் 19 தொற்றுநோய் காலப்பகுதியில் அதன் ஊழியர்கள் மற்றும் பிற பங்குதாரர்களின் பாதுகாப்பினை…
Read More

Singer இன் நேர்த்தியான சமையலறை built-in உபகரணங்கள்

ஆடம்பர மனைகள் மற்றும் அடுக்குமாடி குடியிருப்புகள் அதிகரித்து வருவதை நாம் தொடர்ந்து அவதானித்து வரும் நிலையில்,  நவீன வாழ்க்கை முறையானது எமது வேகமான வாழ்வில்…
Read More

Pelwatte Dairyயின் மற்றொரு நிலைபேறான திட்டம்

உள்நாட்டு பாலுற்பத்தித் துறையில் முன்னணி நிறுவனமாகத் திகழும் Pelwatte Dairy Industries  ,  தனது பாலுற்பத்திப் பொருட்களின் ஊடாக ஊட்டச்சத்தினை வழங்குவதற்காக மட்டுமல்லாமல், பாற்பண்ணையாளர்களுக்கும்…
Read More

சீனி விலை தொடர்பில் விசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியானது

ஒரு கிலோ கிராம் வெள்ளை சீனியின் அதிகபட்ச விலையை குறிக்கும் விசேட வர்த்தமானி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கமைய பொதிசெய்யப்பட்ட வெள்ளை சீனி ஒரு கிலோகிராம்…
Total
0
Share