‘ஜோ பிடன் ஜனாதிபதியானால் அமெரிக்கா சீனாவுக்கு சொந்தமாகிவிடும்’: டிரம்ப்

‘அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் ஜனநாயகக் கட்சி ஆட்சிக்கு வந்து ஜோ பிடன் ஜனாதிபதியானால், அமெரிக்காவை சீனர்கள் சொந்தமாக்கிக் கொள்வார்கள்’ என, டிரம்ப் தெரிவித்துள்ளார்.

அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் நவம்பர் 3ம் திகதி நடைபெறுகிறது. குடியரசுக் கட்சியின் சார்பில் ஜனாதிபதி வேட்பாளராக டிரம்ப் மீண்டும் போட்டியிடுகிறார்.

அவரை அதிகாரபூர்வ வேட்பாளராக அந்தக் கட்சி நேற்று அறிவித்தது. துணை ஜனாதிபதி வேட்பாளராக தற்போது துணை ஜனாதிபதியாக இருக்கும் மைக் பென்ஸ் மீண்டும் போட்டியிட உள்ளார்.

ஜனநாயகக் கட்சி சார்பில் ஜனாதிபதி வேட்பாளராக ஜோ பிடனும், துணை ஜனாதிபதி வேட்பாளராக கமலா ஹாரிசும் களமிறங்கியுள்ளனர்.

இந்த நிலையில் ஜனாதிபதி டிரம்ப், ”நவம்பர் மாதம் நடக்கும் ஜனாதிபதி தேர்தல் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த தேர்தலாக அமெரிக்க வரலாற்றில் இருக்கும்.

இந்த தேசம் மிகக் கொடுமையான திசையில் செல்லப் போகிறதா அல்லது சிறந்த பாதையில் செல்லப்போகிறதா என்பதை முடிவு செய்யும் தேர்தல். இந்தத் தேர்தலில் ஜனநாயகக் கட்சியினர் வாக்குகளைத் திருடுவதற்குத் திட்டமிட்டுள்ளார்கள்.

கடந்த முறை தேர்தலில் உளவு பார்த்தார்கள். இந்த முறை மின்னஞ்சல் வாக்குகளைத் திருட முயல்கிறார்கள். இது தேசத்துக்கே அவமானம். நவம்பர் மாதம் தேர்தலில் ஜனநாயகக் கட்சி ஆட்சிக்கு வந்து ஜோ பிடன் ஜனாதிபதியானால், அமெரிக்காவை சீனர்கள் சொந்தமாக்கிக் கொள்வார்கள்.

சீனாவிலிருந்துதான் கொரோனா வைரஸ் அமெரிக்காவில் புகுந்து பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இதை அமெரிக்க மக்கள் ஒருபோதும் மறக்க மாட்டார்கள். நம்முடைய தேசம் ஒருபோதும் கம்யூனிஸ்ட் நாடாக இருக்காது,” என்றார்.

செய்திகளை உடனுக்குடன் TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்… https://t.me/colombotamil

Get all the Latest Sir Lanka Tamil News and Tamil World News at Colombo Tamil. You can also catch all the latest Tamil Entertainment News by following us on Twitter and Facebook. also Download Our News App in Google Play Store.

Total
3
Shares
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Previous Article
தொலைபேசி

தொலைபேசி எண்ணை மாற்றத் தேவையில்லை; வலையமைப்பை மாற்றலாம்

Next Article

வட கொரிய ஜனாதிபதி கிம் ஜங் உன் மரணம்? அதிர்ச்சி தகவல்

Related Posts
Read More

தொழிலதிபருடன் திடீர் காதல்.. சர்கார் பட நடிகை ரகசிய திருமணம்

விஸ்வாசம், சர்கார் படங்களில் நடித்துள்ள பிரபல நடிகை, தொழிலதிபரை திருமணம் செய்துகொண்டார். பிரபல நடிகை பாப்ரி கோஷ். மேற்கு வங்கத்தைச் சேர்ந்த அவர், பெங்காலி…
பசில் ராஜபக்ஷ
Read More

திவிநெகும வழக்கிலிருந்து பசில் ராஜபக்ஷ விடுதலை

திவிநெகும மோசடி வழக்கிலிருந்து முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷ உள்ளிட்ட நால்வரை கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று (30) விடுவித்துள்ளது. கடந்த ஜனாதிபதித் தேர்தல்…
இன்றைய ராசி பலன்கள்
Read More

இந்த 3 ராசிக்காரர்கள் வீண் விவாதத்தை தவிர்க்காவிட்டால் பின்விளைவு மோசமாக இருக்குமாம்!

நம் வாழ்வின் ஒவ்வொரு நாளும் எப்படி இருக்கும் என்று முன்பே தெரிந்தால் அதனை மேலும் சிறப்பாக மாற்றிட முடியும் அல்லவா? அதற்கு உதவுவது தான்…
Total
3
Share