ஜெனிவாவுக்கான இலங்கையின் நிரந்தர வதிவிடப் பிரதிநிதி ரவிநாத ஆரியசிங்க அங்கிருந்து திருப்பி அழைக்கப்படவுள்ளார்.
ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் அடுத்த அமர்வு வரும் பெப்ரவரி 26ஆம் திகதி தொடங்கி, மார்ச் 26ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளது.
இந்த அமர்வில், இலங்கை தொடர்பான பூகோள கால மீளாய்வு அறிக்கை நிறைவேற்றப்படவுள்ளது.
அத்துடன், 2015 ஆம் ஆண்டு ஒக்ரோபர் மாதம் 1ஆம் திகதி இலங்கையின் அனுசரணையுடன் நிறைவேற்றப்பட்ட, 30/1 தீர்மானம் எந்தளவுக்கு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது என்பது குறித்த இடைக்கால அறிக்கையை ஐ.நா மனித உரிமை ஆணையாளர் செயிட் ராட் அல் ஹுசேன் இந்த அமர்வில் சமர்ப்பிக்கவுள்ளார்.
இந்த நிலையிலேயே, பேரவையின் அமர்வுக்கு முன்னதாக, ஜெனிவாவுக்கான இலங்கையின் நிரந்தரப் பிரதிநிதி ரவிநாத ஆரியசிங்க அங்கிருந்து இடமாற்றம் செய்யப்படவுள்ளார்.
வரும் பெப்ரவரி 28ஆம் திகதியுடன் ரவிநாத ஆரியசிங்க, ஜெனிவாவில் இருந்து இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
அவருக்குப் பதிலாக, ஏ.எல்.ஏ.அசீஸ் அந்தப் பொறுப்பை ஏற்கவுள்ளார்.
இதனை கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.