ஜி-20 நாடுகளின் தலைமை பொறுப்பை ஏற்றுள்ள இந்திய பிரதமருக்கு செந்தில் தொண்டமான் வாழ்த்து!

ஜி-20 நாடுகளின் தலைமை பொறுப்பு இந்தியாவுக்கு வழங்கப்பட்டமைக்கு இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு இலங்கைத் தொழிலாளர் காங்கிரசின் தலைவர் செந்தில் தொண்டமான் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இந்தியா, அமெரிக்கா, சீனா, இங்கிலாந்து, பிரான்ஸ் உள்ளிட்ட 19 நாடுகளின், ஐரோப்பிய கூட்டமைப்பும் ஒன்றிணைந்துள்ள ஜி-20 நாடுகளின் உச்சி மாநாடு இந்தோனேசியாவில் பாலி தீவில் நடைபெற்றது.

இந்த மாநாட்டில் இந்திய பிரதமர் மோடி, அமெரிக்க ஜனாதிபதி ஜோபைடன், சீன ஜனாதிபதி ஜின்பிங், இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக், பிரான்ஸ் ஜனாதிபதி மெக்ரான் உள்ளிட்ட 100க்கும் மேற்பட்ட உலக தலைவர்கள் பங்கேற்றார்கள்.

இந்நிலையில், அடுத்த ஆண்டு ஜி-20 மாநாட்டை இந்தியா தலைமை தாங்கவுள்ளது. இதற்காக   பிரதமர் ஜி-20 மாநாட்டை நடத்தும் தலைமை பொறுப்பை இந்தோனேசியா ஜனாதிபதி விடோடோ முறைப்படி இந்திய பிரதமர் மோடியிடம் வழங்கினார். 

இதன்பிரகாரம் அடுத்த ஆண்டு டிசம்பர் 1ம் திகதிவரை ஜி-20 தலைமை பதவியை இந்தியா அதிகாரப்பூர்வமாக ஏற்றுக்கொண்டுள்ளது.

பிரதமர் நரேந்திர மோடி இந்தியாவை சிறந்த முறையில் வழிநடத்துவதால், இந்தியா ஒரு வலிமை மிக்க நாடாக மாறிவருவருகிறது. 

ஜி20 நாடுகளையும் முழு அர்ப்பணிப்புடன் சிறந்த முறையில்  வழிநடத்துவார் என அனைவராலும் நம்பப்படுகிறது.

மேலும் இந்திய பிரதமர் நரேந்திர  மோடி  ஜி-20 நாடுகளின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டமைக்கு இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் Colomboதமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். JOIN NOW