இலங்கை

‘ஜனாதிபதித் தேர்தலில் 18 வேட்பாளர்கள் போட்டி’

ஜனாதிபதி தேர்தலை நவம்பர் மாதம் 9 ஆம் திகதி முதல் டிசம்பர் 9 ஆம் திகதிக்குள் நடத்த முடியும் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் ஊடக பிரதானிகளை தெளிவூட்டும் செயற்பாடு நேற்று காலை தேர்தல்கள் ஆணையாளர் தலைமையில் நடைபெற்றது.

இதன்போது, ஜனாதிபதி தேர்தலை நடத்துவதற்கான அதிகாரம் செப்டம்பர் மாதம் 15 ஆம் திகதி முதல் தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு வழங்கப்படவுள்ளதாக அந்த ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

பிரதான அரசியல் கட்சிகளை சேர்ந்த 17 பேர் தேர்தலில் போட்டியிடவுள்ளமை தொடர்பில் அறிவிக்கப்பட்டுள்ளதாக தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்தத் தடவை முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் சுயாதீனமாக போட்டியிடவுள்ளமை தொடர்பில் அறிவிக்கப்பட்டுள்ளதாக மஹிந்த தேசப்பிரிய குறிப்பிட்டுள்ளார்.

ஜனாதிபதித் தேர்தலில் 18 வேட்பாளர்கள் போட்டியிடவுள்ளதாக தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இந்தத் தடவை ஜனாதிபதித் தேர்தலின்போது 2018 ஆம் ஆண்டு வாக்காளர் பட்டியல் கருத்திற்கொள்ளப்படும் என தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் தெரிவித்துள்ளார்.

அதற்கமைய, 159,92,096 (ஒரு கோடியே ஐம்பதொன்பதாயிரத்து தொன்னூற்றி இரண்டாயிரத்து தொன்னுற்றியாறு) வாக்காளர்கள் தகுதி பெற்றுள்ளதாகவும் தேர்தல்கள் ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.

‘சாதமாக நிலை வரும்போது தேர்தலை நடத்துவது அரசியல் சூழ்ச்சி’

கடைசிவரை காத்திருக்காதீர்கள் மஹிந்த கோரிக்கை


உடனுக்குடன் செய்திகளை அறிந்துகொள்ள எமது டுவிட்டர் பக்கத்தில் பின்தொடருங்கள்.

செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள எமது முகப்புத்தகத்தை லைக் செய்து வைத்துக்கொள்ளுங்கள் அத்துடன் எமது மொபைல் செயலியை டவுன்லோன்ட் செய்து உடனுக்குடன் Push Notifications ஊடாக தகவல்களை அறிந்துகொள்ளுங்கள் – நம்பகமான செய்திகளுக்கு என்றும் நாங்கள் உங்களுடன்.

Colombo Tamil News App உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது Colomboதமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்.

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!

Website – www.colombotamil.lk
Facebook – www.facebook.com/TheColomboTamil
Twitter – www.twitter.com/TheColomboTamil
Instagram – www.instagram.com/TheColomboTamil
Contact us – hello@colombotamil.lk
Download APP – Google Play

Tags
Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
x
Close
Close