Sun, Jan17, 2021

மேஷம்

ரிஷபம்

மிதுனம்

கடகம்

சிம்மம்

கன்னி

துலாம்

விருச்சிகம்

தனுசு

மகரம்

கும்பம்

மீனம்

‘சைக்கிள்’ உறுப்பினர்களுக்கு எதிரான மனு ஒத்திவைப்பு

மகரகம நகர சபையின் சுயேட்சைக் குழு உறுப்பினர்கள் 23 பேரின் நியமனங்கள் தொடர்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை எதிர்வரும் 30ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ள கொழும்பு மேல் நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.

சைக்கிள் சின்னத்தில் போட்டியிட்டு தெரிவான குறித்த 23 உறுப்பிகர்களின் நியமனங்கள செல்லுபடியற்றதாக உத்தரவிடுமாறு கோரிக்கை விடுத்து இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

மகரகம நகர சபைக்கு ஐக்கிய தேசியக் கட்சி சார்பில் போட்டியிட்ட வேட்பாளர்களால் தாக்கல் செய்யப்பட்ட இந்த மனு கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி கிஹான் குலதுங்க முன்னிலையில் இன்று விசாரணைக்கு வந்தது.

இதன்போது, சைக்கிள் சின்னத்தில் போட்டியிட்டு தெரிவான சுயேட்சைக் குழு உறுப்பினர்கள் 23 பேரும் அந்த நகர சபை பிரிவுக்கு உட்பட்டவர்கள் அல்ல என்று மனுதாரர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

திவுலபிட்டிய, படல்கம மற்றும் கொழும்பு பிரதேசங்களை சேர்ந்த குறித்த நபர்களுக்கு உள்ளுராட்சிமன்ற சட்டத்தின் படி மகரகம நகர சபையின் உறுப்பினர் பதவியை வகிப்பதற்கு தகுதி இல்லை என்று அந்த மனுவில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

பிக் பாஸ் 2 தொடர்பான சுவாரஸ்யமான செய்திகளை மிஸ் பண்ணாமல் தெரிஞ்சுக்கோங்க!

Website – www.colombotamil.lk 
Facebook – www.facebook.com/TheColomboTamil
Twitter – www.twitter.com/TheColomboTamil
Instagram – www.instagram.com/TheColomboTamil

#TamilNews, #SriLanka, #Colombo, #lka  #TamilSportsNews, #TamilCinemaNews, #BiggBossTamil

Latest news

Related news