இலங்கையின் தற்போதைய பொருளாதார நிலைமைக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பொறுப்பேற்க வேண்டும் என, மக்கள் விடுதலை முன்னணி தெரிவித்துள்ளது.
இலங்கையானது தற்போது எந்தவித வளர்ச்சியும் இல்லாது காணப்படுவதாக மக்கள் விடுதலை முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் குறிப்பிட்டுள்ளார்.
நிகழ்வொன்றில் உரையாற்றுகையில் அவர் இதனைக் கூறியுள்ளதுடன்,இலங்கையானது முன்னோக்கி செல்ல முடியாத நிலையிலும் பின்னோக்கி செல்ல முடியாத நிலையிலும் சேற்றில் சிக்கிய வண்டியை போல தவிப்பதாக சுட்டிக்காட்டியுள்ளார்.