புத்தாண்டு வாழ்த்துக்கள்

சேனாபதியின் புத்தாண்டு வாழ்த்துக்கள்!

2020-ஆம் ஆண்டின் முதல் நாளான இன்றைய தினத்தை அனைவரும் கோலாகலமாகக் கொண்டாடிவருகின்றனர்.

பொதுமக்கள் மட்டுமின்றி பல்வேறு அரசியல் பிரபலங்கள், திரையுலகினர் தங்களது புத்தாண்டு வாழ்த்துக்களைப் பகிர்ந்து வருகின்றனர்.

இந்தநிலையில் கமல்ஹாசன் நடிப்பில் உருவாகிவரும் இந்தியன்-2 படத்தின் சார்பாக புத்தாண்டு வாழ்த்துக்களை இயக்குநர் சங்கர் தெரிவித்துள்ளார்.

லைகா புரொடக்‌ஷன்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் இந்தியன் திரைப்படத்தின் இரண்டாவது பாகம் உருவாகிவருகிறது.

அனிருத் இசையமைக்கவுள்ள இந்தத் திரைப்படத்தில் சித்தார்த், காஜல் அகர்வால், ரகுல் பிரீத் சிங், சமுத்திரக்கனி, நெடுமுடி வேணு, பாபி சிம்ஹா, விவேக், மனோபாலா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர்.

படத்தின் இயக்குநர் தனது ட்விட்டர் பக்கத்தில் இந்தியன் -2 திரைப்படத்தின் புதிய போஸ்டரை வெளியிட்டு புத்தாண்டு வாழ்த்துக்களைப் பகிர்ந்துள்ளார். அதே போன்று படத்தின் கதாநாயகனும், மக்கள் நீதி மய்யம் கட்சியின் நிறுவனருமான நடிகர் கமல்ஹாசன் தனது ட்விட்டர் பக்கத்தில் புத்தாண்டு வாழ்த்துக்களைப் பகிர்ந்துள்ளார்.

கைகுலுக்கி வாழ்த்து பரிமாறும் ஆண்டு மட்டுமல்ல, கரம்கோர்த்து களமாடும் ஆண்டு. நீ, நான்,நாம் என அனைவரும் இணைந்து களமாடினால்,பாரதி சொன்னது போல வான்புகழ் கொண்ட தமிழகமாக மீண்டும் ஆக்கலாம்.

இன்று தொடங்குவது புத்தாண்டு மட்டுமல்ல.நம் வெற்றிப்பயணமும் தான்.நாளை நமதே.புத்தாண்டு வாழ்த்துக்கள்.

அவர் தனது பதிவில் கைகுலுக்கி வாழ்த்து பரிமாறும் ஆண்டு மட்டுமல்ல, கரம்கோர்த்து களமாடும் ஆண்டு. நீ, நான்,நாம் என அனைவரும் இணைந்து களமாடினால்,பாரதி சொன்னது போல வான்புகழ் கொண்ட தமிழகமாக மீண்டும் ஆக்கலாம்.

இன்று தொடங்குவது புத்தாண்டு மட்டுமல்ல. நம் வெற்றிப்பயணமும் தான். நாளை நமதே. புத்தாண்டு வாழ்த்துக்கள் என்று குறிப்பிட்டுள்ளார்.

Total
0
Shares
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Previous Article
புத்தாண்டில் பிறந்த குழந்தைகள்

புத்தாண்டில் பிறந்த குழந்தைகள்: இந்தியா முதலிடம்!

Next Article
சந்திராயன் -3

சந்திராயன் -3 பணிகள் ஆரம்பித்துவிட்டன: கே.சிவன்

Related Posts
Read More

தொழிலதிபருடன் திடீர் காதல்.. சர்கார் பட நடிகை ரகசிய திருமணம்

விஸ்வாசம், சர்கார் படங்களில் நடித்துள்ள பிரபல நடிகை, தொழிலதிபரை திருமணம் செய்துகொண்டார். பிரபல நடிகை பாப்ரி கோஷ். மேற்கு வங்கத்தைச் சேர்ந்த அவர், பெங்காலி…
ரஜினிகாந்த்
Read More

அரசியல் களம் காணும் ரஜினிகாந்த்? – இறுதி முடிவெடுக்க நாளை ஆலோசனை!!

அரசியல் களம் காணும் ரஜினிகாந்த்? – இறுதி முடிவெடுக்க நாளை ஆலோசனை!! நடிகர் ரஜினிகாந்த தனது மக்கள் மன்ற நிர்வாகிகளுடன் நாளை (நவம்பர் 30)…
ரேணு தேசாய்
Read More

காதலில் ஏமாற்றப்பட்டேன்.. பிரபல ஹீரோவின் முன்னாள் மனைவி திடுக்!

காதலில் இருக்கும்போது தான் ஏமாற்றப்பட்டதாக பிரபல ஹீரோவின் முன்னாள் மனைவி கூறியுள்ளார். தமிழில், செல்வா இயக்கத்தில், பிரபுதேவா, பார்த்திபன், கவுசல்யா நடித்த ஜேம்ஸ்பாண்டு படத்தில்…
Read More

இயக்குனர் ‘சிறுத்தை’ சிவா தந்தை உடல் நலக்குறைவால் மரணம்

இயக்குனர் சிறுத்தை சிவாவின் தந்தை, உடல் நலக்குறைவு காரணமாக நேற்று உயிரிழந்தார். கார்த்தி, தமன்னா நடித்த சிறுத்தை படம் மூலம் இயக்குனர் ஆனவர் சிவா.…
Total
0
Share