கிருஷ்ண ஜெயந்தி

செல்வ வளத்தை அருளும் கிருஷ்ண ஜெயந்தி

உலகத்தைக் காத்து ரட்சிப்பது இறைவன் என்ற மாபெரும் சக்தி. காப்பதும் அந்த இறைவன்தான். அழிப்பதும் அந்த இறைவன்தான். அப்படிப்பட்ட இறைவனில், பரமாத்மாவான ஸ்ரீ மகா விஷ்ணுவின் அவதாரங்களில் மிக முக்கியமானது ஸ்ரீ ராமர், ஸ்ரீ கிருஷ்ணர்.

ஸ்ரீ கிருஷ்ணர் பல லீலைகளைப் புரிந்து, மக்களைக் காத்து அருளினார். மேலும், மகாபாரதப் போரில் பல தத்துவங்களை உணர்த்தி பகவத் கீதை என்ற அற்புதத்தை அருளினார். கண்ணா, கிருஷ்ணா என்றாலே நம்முடைய மனது ஆனந்தத்தில் ஆழ்ந்திடும். அப்படிப்பட்ட கிருஷ்ண பரமாத்மா அவதரித்த கிருஷ்ண ஜெயந்தி தினப் பண்டிகையைக் கொண்டாடும் நாளில், செல்வ வளத்தைப் பெருக்கும் ஸ்ரீ கிருஷ்ணர் குறித்தும் சிலவற்றைத் தெரிந்துகொள்வோம்.

ஸ்ரீ கிருஷ்ணர் பல லீலைகளைப் புரிந்து, மக்களைக் காத்து அருளினார். கம்சன் என்ற அரக்கன், தனது தங்கைக்குப் பிறக்கும் 8 ஆவது குழந்தையின் கையால் கொல்லப்படுவான் என்பதை அசரீரியின் மூலம் அறிந்து தங்கை என்றும் பாராமல் தேவகி – வசுதேவரைச் சிறையில் அடைத்தான்.

தேவகிக்கு பிறந்த ஒவ்வொரு குழந்தைகளையும் கொன்று வந்தான். கம்சனிடமிருந்து தப்பித்து 8 ஆவதாக பிறந்த, இல்லையில்லை அவதரித்த, கிருஷ்ணரைக் காப்பாற்ற, யமுனை நதியைக் கடந்து, கிருஷ்ணரை வசுதேவர், கோகுலத்தில் வாழ்ந்து வந்த யாதவ குலத்தைச் சேர்ந்த நந்தகோபர் – யசோதையிடம் கொண்டு போய் சேர்த்தனர்.

கோகுலத்தில் அனைவருக்கும் செல்லப் பிள்ளையாக வளர்ந்த கிருஷ்ணர், பல லீலைகளைப் புரிந்தார். வளர்ந்து இளைஞன் ஆனதும், அரக்கன் கம்சனை அழித்தார். பின்னர் மகாபாரதப் போர் என கிருஷ்ணரின் லீலைகள் தொடர்ந்து கொண்டே சென்றன.

ஒவ்வோர் ஆண்டும் தமிழ் மாதமான ஆவணி மாதத்தில் வரக்கூடிய தேய்பிறை அஷ்டமி திதியில் கிருஷ்ணர் அவதரித்ததாகக் கொண்டாடப்படுவது வழக்கம். ஆனால், இந்த ஆண்டு, கொஞ்சம் முன்னதாகவே ஆடி மாதமே தேய்பிறை அஷ்டமி தினத்திலேயே கொண்டாடப்படுகிறது.

2020 ஆம் ஆண்டு, ஆகஸ்ட் மாதம் 11 ஆம் தேதி தமிழகத்திலும், வட இந்தியாவில் 12 ஆம் தேதியும் கிருஷ்ண ஜெயந்தி கொண்டாடப்படுகிறது. ஆக. 11, ஆடி மாதம் 27 ஆம் திகதி, காலை 7.55 மணிக்கு அஷ்டமி திதி தொடங்கி, ஆகஸ்ட் 12 ஆம் திகதி காலை 9.36 மணிக்கு முடிவடைகிறது.

ஸ்ரீ கிருஷ்ணர் அவதரித்த நாளான அஷ்டமி திதி தொடங்கும் ஆகஸ்ட் 11 ஆம் திகதிதான் தமிழகத்தில் கிருஷ்ண ஜெயந்தி கடைப்பிடிக்கப்படுகிறது. அதே வேளை ஸ்ரீ கிருஷ்ணர் இரவில்தான் பிறந்தார் என்பதால், வட இந்தியர்கள் கிருஷ்ண ஜென்மாஷ்டமி என்ற பெயரில் இரவில் பூஜை புனஸ்காரங்களை செய்கின்றனர்.

இதுதான் வட இந்தியர்களின் வழக்கம். அஷ்டமி திதி ஆகஸ்ட் 11 ஆம் திகதி காலை 7.55 மணிக்கு தொடங்குவதால், அதன் பின்னர் எமகண்டம், குளிகை, ராகு காலம் உள்ளிட்ட பொருத்தமற்ற நேரங்களைத் தவிர்த்து விட்டு, எப்போது வேண்டுமானாலும் பூஜைகள் செய்ய உகந்த நேரம். குறிப்பாக, நல்ல நேரம், கெளரி நல்ல நேரம் மிகவும் உத்தமமான நேரமாகும்.

ஸ்ரீ கிருஷ்ணருக்கு வெண்ணெய் உள்ளிட்ட அனைத்து இனிப்பு பலகாரங்களும் பிடிக்கும். அதனால், அவரவர்களுக்கு முடிந்த அளவுக்கு இனிப்புகளைச் செய்து வழிபட வேண்டும். வெண்ணெய் அவசியம் பூஜையில் இருக்க வேண்டும். அதே போல், குசேலனின் உண்மையான அன்பை, அவர் கொண்டு வந்த அவல் மூலம் வெளிப்படுத்தினார்.

அதனால், எந்த ஒரு பலகாரத்தையும் செய்ய முடியவில்லையே, என்று கலங்கும் நிலையில் இருப்பவர்கள் கவலைப்பட வேண்டாம். ஸ்ரீ கிருஷ்ணர் பூஜையில், அவல் மற்றும் வெண்ணெய் ஆகிய இரண்டையும் வைத்தாலே, ஸ்ரீ கிருஷ்ண பரமாத்மா மனதார ஏற்றுக்கொள்வார்.

கிருஷ்ண ஜெயந்தி அன்று இந்த அற்புதமான தினத்தில், ஸ்ரீ கிருஷ்ணரையே நினைத்து உண்ணா நோன்பு இருந்து, அவரது திருநாமங்களை உச்சரிக்கலாம்.

கிருஷ்ணரின் பாடல்களை பஜனையாகப் பாடி வழிப்படுவதும் சிறந்தது. கிருஷ்ணர் அருளிய பகவத் கீதை உபதேசத்தைப் பாராயணம் செய்யலாம். தம்மால் முடிந்த அனைத்துவித இனிப்புகள் மற்றும் முறுக்கு, எள்ளடை போன்ற பலகாரங்களையும், அவல் மற்றும் வெல்லத்தால் கலந்து செய்யப்பட்ட இனிப்பு உள்ளிட்ட அனைத்தையும் பூஜை அறையில் வாழை இலையில் வைக்க வேண்டும்.

வீட்டில் உள்ள சிறு குழந்தைகளின் கால்களை, மாக்கோல மாவில் வைத்து, வாசலில் இருந்து, பூஜையறை வரையிலும் பாதத்தைப் பதிய வைக்கலாம். ஸ்ரீ கிருஷ்ணரே, வீட்டிற்குள் வந்து விட்டது போன்ற ஒரு உணர்வு பொங்கும். தொடர்ந்து, படையிலிட்டு அக்கம், பக்கத்தினர் என சாதி, மதம் பார்க்காமல் அனைவருக்கும் வழங்கி, மத நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் பண்டிகையாக ஸ்ரீ கிருஷ்ண ஜெயந்தியை கொண்டாடி மகிழ்வோம்.

செய்திகளை உடனுக்குடன் TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்… https://t.me/colombotamil

Get all the Latest Sir Lanka Tamil News and Tamil World News at Colombo Tamil. You can also catch all the latest Tamil Entertainment News by following us on Twitter and Facebook. also Download Our News App in Google Play Store.

Total
2
Shares
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Previous Article
கேரளாவின் மூணாறு

உயிரிழந்தோர் எண்ணிக்கை 50ஆக அதிகரிப்பு

Next Article

தலைமைத்துவம் தொடர்பில் ரணில் விடுத்துள்ள கோரிக்கை

Related Posts
Read More

10 நாட்களுக்கு திருமலையில் சொர்க்க வாசல் திறக்க முடிவு

திருமலையில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு, 10 நாட்களுக்கு சொர்க்க வாசலை திறந்து வைக்க, தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது. திருப்பதி, திருமலை அன்னமய பவனில், நேற்று…
Read More

முருகனின் சாகசங்களும் அவரது பிறப்பின் மகத்துவங்களும் தெரியுமா?

இந்து புராணங்கள் தனக்கே உரிய அனைத்து புராணக்கதைகளையும், பல்வேறு கடவுள்கள் மற்றும் தெய்வங்களைப் பற்றியும், புராணங்களின் மாறுபாடுகளையும், வாழ்க்கை நெறிகளையும் கொண்ட ஒரு கண்கவர்…
சபரிமலை ஐயப்பன்
Read More

சபரிமலை ஐயப்பன் கோவிலில் இன்று நடை திறப்பு

சபரிமலை ஐயப்பன் கோவிலில் மண்டல, மகரவிளக்கு பூஜை இன்று தொடங்குகிறது. இதையொட்டி, இன்று மாலை 5 மணிக்கு தந்திரி கண்டரரு ராஜீவரு முன்னிலையில் மேல்சாந்தி…
Read More

ஏன் வீட்டில் துளசி செடியை கட்டாயம் வளர்க்க வேண்டும் தெரியுமா?

இந்துக்களுக்கு மிக முக்கியத்துவம் வாய்ந்த தெய்வமாக கருதப்படும் செடி துளசி ஆகும். இந்துக்கள் துளசி செடி முன், தீபம் ஏற்றி பூஜை செய்வார்கள். துளசி…
Total
2
Share