சுரேஷ் சக்ரவர்த்தியை நோஸ் கட் செய்த அறந்தாங்கி நிஷா!

இந்த வருடம் நடிகர் ரியோ, செய்திவாசிப்பாளர் அனிதா சம்பத் போன்ற 16 போட்டியாளர்களுடன் தொடங்கிய பிக் பாஸ் 4வது சீசன் நிகழ்ச்சியில் நேற்று பிக் பாஸ் அவர்கள், போட்டியாளர்களுக்கு முதல் டாஸ்க் கொடுத்தார்.

அந்த டாஸ்கில் போட்டியாளர்கள் அனைவரும் கார்டன் ஏரியாவில் நிற்க வைக்கப்பட்டனர். அங்கு வைக்கப்பட்டிருந்த பந்துகளை பிக் பாஸ் போட்டியாளர்களிடம் எடுக்கச் சொன்னார். போட்டியாளர்கள் அனைவரும் முந்தி அடித்துக் கொண்டு எடுக்கவே ரம்யாவிற்கு மட்டும் பந்து கிடைக்கவில்லை. அதனைத் தொடர்ந்து அங்கு இருந்த

சுரேஷ் சக்ரவர்த்தி தான் வைத்திருந்த பந்தினை ரம்யாவிடம் கொடுக்க முயலவே ரம்யா அதனை ஏற்க மறுத்து விட்டார்.

இதனிடையில் பிக் பாஸ் ரம்யாவை கன்பெஷன் ரூமிற்கு அழைத்தார். அங்கு ரம்யாவிடம் பிக் பாஸ் அவர்கள், நீங்கள் தான் இந்த வாரத்திற்கான வீட்டின் தலைவர் என்று கூறினார். அதனைத் தொடர்ந்து அவர் கன்பெஷன் ரூமை விட்டு வெளியே வந்து சக போட்டியாளர்களிடம், நான் இந்த வாரத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டேன் என்று மகிழ்ச்சியுடன் கூறினார்.

அப்போது அங்கு இருந்த போட்டியாளர்கள் அனைவரும் ஆரவாரம் செய்யவே, சுரேஷ் சக்ரவர்த்தி மட்டும் ரம்யாவிடம் நீ அந்த பாலினை என்னிடம் வாங்கியிருந்தால் தப்பித்து இருப்பாய் என்று கூறினார். அப்போது சட்டென மற்றொரு போட்டியாளரான அறந்தாங்கி நிஷா, நல்லவேளை அவ்வாறு நடக்கவில்லை நாங்கள் தப்பிச்சோம் என்று சுரேஷ் சக்ரவர்த்திக்கு நோஸ் கட் கொடுத்தார்.

அப்போது அவரை பார்த்து சுரேஷ் சக்கரவர்த்தி கோபத்துடன் ஒரு லுக் கொடுத்தார்.

பிக் பாஸ் வீடு என்றாலே சண்டைகளுக்கு அங்கு பஞ்சமிருக்காது. அந்த வகையில் இந்த சீசன் இனிதே ஆரம்பிக்கப்பட்டாலும் இங்கும் பல சண்டைகள் வரக்கூடும். அதிலிருந்து மீண்டு எந்தெந்த போட்டியாளர்கள் சாதிக்கிறார்கள் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, கொழும்பு தமிழ் Android Mobile App இனை, இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.

சமூக ஊடகங்களில் கொழும்பு தமிழ்:

கொழும்பு தமிழ் ஃபேஸ்புக்
கொழும்பு தமிழ் ட்விட்டர்
கொழும்பு தமிழ் இன்ஸ்டாகிராம்
கொழும்பு தமிழ் டெலிகிராம்
கொழும்பு தமிழ் யு டியூப்

Get all the Latest Sir Lanka Tamil News and Tamil World News at Colombo Tamil. You can also catch all the latest Tamil Entertainment News by following us on Twitter and Facebook. also Download Our News App in Google Play Store.

Total
4
Shares
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Previous Article

சனம் ஷெட்டி முகத்தில் அடித்தது போல இப்படி சொல்லிவிட்டார்களே

Next Article

ஷிவானியை ரவுண்டு கட்டிய மற்ற போட்டியாளர்கள்

Related Posts
அனுஷ்கா
Read More

அனுஷ்காவின் திடீர் முடிவால் தயாரிப்பு நிறுவனங்கள் தடுமாற்றம்

அனுஷ்கா தற்போது பெண் மையக் கதாபாத்திரங்களில் கொண்ட படங்களில் நடிக்க ஆர்வம் காட்டுவதில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது. இதற்கு அனுஷ்கா நடிப்பில் லேட்டஸ்ட்டாக வெளியான சைலன்ஸ்…
Read More

இரண்டாவது இன்னிங்சில் அதிரடியாக களமிறங்கிய சிம்பு!

இயக்குனர் சுசீந்திரன் இயக்கத்தில் ஈஸ்வரன் திரைப்படத்தினை வெறும் 30 நாட்களில் படப்பிடிப்பு மற்றும் டப்பிங் பணிகளை முடித்த சிம்பு, வெங்கட் பிரபு இயக்கத்தில் சுரேஷ்…
Read More

மாநாடு படத்தின் புதிய போஸ்டர் வெளியானது

கடந்த 2018 ஆம் ஆண்டு சிம்பு மாநாடு படத்தில் நடிக்கவிருப்பதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது. இயக்குநர் வெங்கட் பிரபு இப்படத்தை இயக்குகிறார். படப்பிடிப்பு தொடங்கினாலும்…
Total
4
Share