சுருக்கங்கள் அற்ற மென்மையான உதட்டுக்கு இதோ சில டிப்ஸ்

அனைத்து பெண்களும் தங்களது உதடு மென்மையாக இருக்க வேண்டும் என பொதுவாக விரும்புவார்கள். ஆனால், சிலரின் உதடு ஆரோக்கியம் இழந்து பொலிவிழந்து வறண்டு அசிங்கமாக காணப்படுவதுண்டு.

பொதுவாக முகத்தில் மட்டும்தான் சுருக்கங்கள் வரும் என்பதல்ல உதட்டிலும் சுருக்கங்கள் வரும். அந்தவகையில் உதட்டில் இருக்கும் சுருக்கங்களை போக்க சில வழிமுறைகளை பார்க்கலாம்

ஆலிவ் ஆயில் சுருக்கங்களை நீக்குவதில் ஒரு முக்கியப் பங்கு வகிக்கிறது. இதனை உங்கள் உதட்டில் தினமும் தேய்த்து வாருங்கள். இது உங்கள் உதட்டில் ஈரப்பதத்தைத் தக்க வைத்து சுருக்கங்களுடன் போராடி சரி செய்ய உதவுகிறது.

இலவங்கப் பட்டைப் பொடியை சிறிது நீரில் கலந்து அந்தக் கலவையை உதட்டின் மீது தடவ வேண்டும். 10 நிமிடம் அதனை வைத்திருக்க வேண்டும். பின்னர் குளிர்ந்த நீரினால் கழுவி விட வேண்டும். இது மிக பழைய வீட்டு வைத்திய முறைகளில் உதட்டு சுருக்கத்தைப் போக்க பயன்படுத்தும் முறையாகும்.

தினமும் 2 முறை கற்றாழை ஜெல்லை உதட்டில் சுருக்கங்கள் உள்ள இடத்திலும் அதனை சுற்றி உள்ள பகுதிகளிலும் தேய்த்து வர வேண்டும். இது உதட்டு சுருக்கத்தை விரட்டியடிப்பதில் சிறந்து விளங்குகிறது.

வைட்டமின் டி காப்ஸூல்களில் இருந்து எடுக்கப்பட்ட எண்ணெயை உதட்டின் மீது தடவி 15 நிமிடம் ஏற வைக்க வேண்டும். பின்னர் கழுவி விட வேண்டும். இந்த இயற்கை வைத்திய முறையை தினமும் செய்து வர வேண்டும்.

உதட்டில் தேங்காய் எண்ணெயை தேய்த்து மசாஜ் செய்து 15 நிமிடம் கழித்து அதனை சுத்தம் செய்து விடுங்கள். இதனை தொடர்ந்து செய்வதால் உதட்டில் உள்ள சுருக்கம் மறைவதுடன் அவை அடிக்கடி வராமலும் தடுத்து விடும்.

ஒரு நாள் முழுவதும் ரோஸ் வாட்டரை உதட்டின் மீது தடவி வந்தால், உதடானது சுருக்கங்கள் இல்லாமல் அழகாகத் தெரியும். குறிப்பாக நீங்கள் தூங்கப் போவதற்கு முன் இதனை தடவி தூங்குங்கள். இரவு நேரத்தில் இது சிறப்பாக செயல்படும்.

செய்திகளை உடனுக்குடன் TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்… https://t.me/colombotamil

Get all the Latest Sir Lanka Tamil News and Tamil World News at Colombo Tamil. You can also catch all the latest Tamil Entertainment News by following us on Twitter and Facebook. also Download Our News App in Google Play Store.

Total
3
Shares
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Previous Article

அந்த இடத்தில் சரக்கு.. சூடேற்றும் பியூமியின் வில்லங்க செயல்!

Next Article

செல்வ செழிப்புடன் வாழ இந்த பொருட்களை வீட்டில் வைத்தாலே போதுமாம்!

Related Posts
Read More

இந்த நேரத்தில் தினமும் நீங்க தண்ணீர் குடிச்சீங்கனா… உங்க எடையும் குறையுமாம்

போதுமான அளவு தண்ணீர் குடிப்பது நம் அன்றாட பழக்கமாக இருக்க வேண்டும். ஒருவர் தண்ணீர் குடிக்க வேண்டிய நேரங்களையும் அறிந்திருக்க வேண்டும். தண்ணீரைக் குடிக்கவும்,…
Read More

முள்ளங்கியை சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்

முள்ளங்கியில் இருக்கும் அதிகளவு நோயெதிர்ப்பு சக்தியானது, உடலுக்கு தேவையான வைட்டமின் சத்துக்கள் மற்றும் தாது உப்புகளை அளிக்கிறது. வெள்ளை நிறத்தில் உள்ள முள்ளங்கி மருத்துவ…
Read More

இந்த அறிகுறிகள் இருந்தால் நீங்க ஒரு ஆபத்தான காதலில் சிக்கியிருக்கீங்கனு அர்த்தமாம்…!

காதல் ஒரு அழகான, விவரிக்க முடியாத உணர்வு. உங்களுக்கு பிடித்த ஒருவரைபார்க்கும்போது, மெதுவாக காதலிக்கத் தொடங்குங்கள், அது மிகவும் ஆரோக்கியமானதாகவும் ஆறுதலாகவும் இருக்கும். ஒருவரின்…
Total
3
Share