ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுடன் இணைந்துகொள்ளும் எதிர்பார்ப்பில் உள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று (05) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இதனைக் கூறியுள்ளார்.
கட்சி மாறியவர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுப்பது தொடர்பிலான நிலைப்பாட்டில் ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியின் ஒரு சிலரே உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், ஐக்கிய தேசியக் கட்சியை தோற்கடிக்க கூடிய வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷவே என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.