தொழில்நுட்பம்வெளிநாடு

சீனாவுக்கு ஆதரவான 1.70 இலட்சம் டுவிட்டர் கணக்குகள் நீக்கம்

சீனாவுக்கு ஆதரவான கருத்துகளை பரப்பும் வகையில் செயல்பட்டு வந்த 1,70,000 கணக்குகளை டுவிட்டர் நீக்கியுள்ளது.

இந்த கணக்குகளை பயன்படுத்தி ஹாங்காங் போராட்டம், கொரோனா தொற்று மற்றும் பிற முக்கிய நிலைமைகள் குறித்து போலியான தகவல்களை பரப்பி வந்துள்ளதாக டுவிட்டர் நிறுவனத்திடம் இணைந்து பணியாற்றிவரும் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

அத்துடன், இந்த தகவல்கள் அனைத்தும் சீன மொழியில் பதிவிடப்பட்டு வந்துள்ளதாக நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சீனாவில் சமூகவலைதளமான டுவிட்டர் தடை செய்யப்பட்டுள்ளது. இருப்பினும் விபிஎன் மூலம் பயன்படுத்தப்பட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதுகுறித்து ஆஸ்திரேலியா ஆய்வு நிறுவனம் கூறுகையில்., சீனா ஆதரவு கணக்குகளின் நோக்கமானது வெளிநாட்டு வாழ் சீனாவை சேர்ந்தவர்கள் திறனை பயன்படுத்தி கட்சியின் செல்வாக்கை அதிகரிப்பதன் முயற்சி என தெரிவித்துள்ளது.

அதேபோல் இதுபோன்ற கணக்குகள் முடக்கப்பட்டு வரும் சூழலிலும் டுவிட்டர் மற்றும் பேஸ்புக்கில் மறுபயன்படுத்தப்பட்ட கணக்குகள் மற்றும் புதிய கணக்குகள் மூலம் பிரசாரங்கள் தொடர்ந்து வருகின்றன என ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.

குறிப்பிட்ட விடயங்களை டாப் ஹேஷ்டேக்குகளாக கொண்டுவந்து அவற்றை உயர்த்தி பிடிக்கும் பிரசார ஆபரேட்டகளாக்க அதிக டுவிட்கள் செய்து முயற்சி செய்து வருகின்றனர்.

இந்த கணக்குகள் பலவை ஜனவரி மாதத்திலேயே தொடங்கிப்பட்டிருக்கலாம் எனவும் அவை அனைத்தும் கொரோனா குறித்து பதிவுகளை மேற்கொள்வதில் ஈடுபட்டிருக்கின்றன எனவும் கொரோனாவை முற்றிலும் ஒழிக்க சீனா பாடுபட்டு வருகிறது, ஹாங்காங் போராட்டம், அமெரிக்காவை விரோதிகளாக சித்தரிப்பது போன்ற டுவிட்களை பதிவு செய்து வருவதாகவும் ஸ்டான்ட்போர்டு இணைய ஆய்வக ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.

முன்னதாக டுவிட்டர் ரஷ்ய அரசுக்கு ஆதரவாக செயல்பட்டு வந்த 1000 கணக்குகள், ஹாங்காங் அரசியல் தொடர்பாக சீனாவில் செயல்பாட்டில் இருந்த 1000 கணக்குகள், துருக்கி அரசுக்கு ஆதராக செயல்பட்டு வந்த 7340 டுவிட்டர்கள் கணக்குகளை நிறுவனம் நீக்கியிருந்தது.

செய்திகளை உடனுக்குடன் TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்… https://t.me/colombotamil

Get all the Latest Sir Lanka Tamil News and Tamil World News at Colombo Tamil. You can also catch all the latest Tamil Entertainment News by following us on Twitter and Facebook. also Download Our News App in Google Play Store.

Tags
Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
x
Close
Close