Tue, Mar9, 2021

மேஷம்

ரிஷபம்

மிதுனம்

கடகம்

சிம்மம்

கன்னி

துலாம்

விருச்சிகம்

தனுசு

மகரம்

கும்பம்

மீனம்

இதையும் படிங்க

சிவகார்த்திகேயன் ஹீரோயினுக்கு திருமணம் முடிந்தது ..! கணவருடன் வெளியான புகைப்படம்

நடிகை சிவகார்த்திகேயன் பட ஹீரோயின் ஆத்மியாவிற்கு இன்று திருமணம் நடந்து முடிந்துள்ளது.

இவர் மணக்கோலத்தில் இருக்கும் புகைப்படம் வெளியாக ரசிகர்கள் தங்களது வாழ்த்தை மழையாக பொழிந்து வருகிறார்கள்.

நடிகர் சிவகார்த்திகேயன் நடித்த மனம் கொத்திப் பறவை படத்தில் அவருடன் நடித்தவர் ஆத்மியா. அதன் பின்னர் “போங்கடி நீங்களும் உங்க காதலும்”, தற்போது சமுத்திரகனியுடன் வெள்ளை யானை ஆகிய படங்களில் நடித்துள்ளார்.

தமிழில் பெரிதாக வாய்ப்புகள் கிடைக்காததால் மீண்டும் கேரளாவிற்கு திரும்பிய ஆத்மிகா. அமீபா, ஜோசப், விஜய் சேதுபதியுடன் மார்க்கோனி ஆகிய சில படங்களில் நடித்தார்.

அதோடு கொரோனா லாக்டவுன் காலத்தில் கால் சென்டரில் பணிபுரிந்து, மக்களுக்கு சேவை செய்ததற்காக பாராட்டுகளையும் பெற்றார்.

தற்போது ஆத்மியாவுக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது. கப்பலில் வேலை செய்யும் கேரள மாநிலம் கன்னூரைச் சேர்ந்த சனூப் என்பவரை கரம் பிடித்தார்.

கன்னூரில் காலை 9.59 மணி முதல் 11.33 மணிக்குள் கோலாகலமாக நடந்து முடிந்தது. பெற்றோர்கள் நிச்சயித்த இந்த திருமணத்தின் நண்பர்கள் மற்றும் உறவினர்கள் பலர் கலந்து கொண்டனர்.

ஆத்மியா மணக்கோலத்தில் இருக்கும் புகைப்படம் வெளியாகவே அவருக்கு பலர் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.

மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, கொழும்பு தமிழ் Android Mobile App இனை, இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.

சமூக ஊடகங்களில் கொழும்பு தமிழ்:

கொழும்பு தமிழ் ஃபேஸ்புக்
கொழும்பு தமிழ் ட்விட்டர்
கொழும்பு தமிழ் இன்ஸ்டாகிராம்
கொழும்பு தமிழ் டெலிகிராம்
கொழும்பு தமிழ் யு டியூப்

Get all the Latest Sir Lanka Tamil News and Tamil World News at Colombo Tamil. You can also catch all the latest Tamil Entertainment News by following us on Twitter and Facebook. also Download Our News App in Google Play Store.

தொடர்புச் செய்திகள்

ஆசிரியரிடமிருந்து மேலும் பதிவுகள்

மேலும் பதிவுகள்

பிந்திய செய்திகள்

x