Sat, Apr17, 2021

மேஷம்

ரிஷபம்

மிதுனம்

கடகம்

சிம்மம்

கன்னி

துலாம்

விருச்சிகம்

தனுசு

மகரம்

கும்பம்

மீனம்

இதையும் படிங்க

சிறு வயதில் பெண் குழந்தைகள் பருவமடைவது எதனால்?.. பெற்றோர்கள் கவனிக்க வேண்டியது?

சிறு வயதில் பெண் குழந்தைகள் பருவமடைவது, அவர்களின் உணவுப்பழக்க வழக்கத்தால் தான் என்பது தெரியவருகிறது. இன்று சுதாரிக்காத பட்சத்தில், எதிர்காலத்தில் அவர்களின் வாழ்க்கை பெரும் கேள்விக்குறியாகும். பெற்றோர்களே உஷார்.!!

தங்களின் அழகை பெண்கள் வர்ணித்து வந்தாலும், அழகிற்காக உடல் எத்தனை மாற்றங்களை சந்திக்கிறது? உடலின் ஒவ்வொரு உறுப்புகளும் எப்படி வளர்ச்சியை பெறுகிறது? உடல் உறுப்புகளின் வளர்ச்சியால் என்ன பலன்? திருமணத்திற்கு பின்னர் உள்ள வாழ்க்கையில், பெண்களின் உடல் எப்படி இருக்கிறது? தாய்மையை ஏற்படுத்த எந்த உறுப்புக்கள் எப்படி உதவுகிறது? என்பது பலருக்கும் தெரியாத அதிசயமாகவும், இரகசியமாகவும் இருந்து வருகிறது.

இவ்வாறான அதிசியம் மற்றும் இரகசியம் பெண்கள் உடலில் வயதிற்கு வரும் போது ஏற்பட தொடங்குகிறது. இன்றுள்ள காலகட்டங்களில் 10 வயதுள்ள சிறுமிகள் வயதுக்கு வர தொடங்கிவிட்டார்கள்.

பத்து வயதில் சிறுமிகள் வயதுக்கு வந்தாலும், அவர்களின் உடல் வளர்ச்சி 20 வயதுடைய நபரை போல தோற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறது. இவ்வாறான பிரச்சனை மற்றும் உடல் அமைப்பு எதிர்காலத்தில் பிற உடல் சார்ந்த பிரச்சனைகளை ஏற்படுத்துக்கிறது.

இன்றுள்ள பெற்றோர்கள் தங்களுக்கு ஒரு குழந்தை இருந்தால் போதும் என்று எண்ணிக்கொண்டு இருக்கின்றனர். அந்த குழந்தை பெண்ணாக கிடைத்துவிட்டால், தங்களின் இல்லத்தில் செல்லக்குழந்தையாக அவர் இருக்கிறார்.

அந்த செல்லக்குழந்தை கேட்கும் அனைத்தையும் வாங்கி கொடுத்து வருகின்றனர். அவர்களிடம் மறுப்பு என்று வார்த்தையே மக்களிடம் இருக்காது. இவ்வாறாக கடைகளில் விற்பனை செய்யப்படும் பொருட்களை செல்லக்குழந்தைகளுக்கு வாங்கி வழங்குகின்றனர்.

அதிகளவிலான கொழுப்புகள் அடங்கிய உணவுகளை அதிகளவு சிறுமிகள் சாப்பிடுவதால், அவர்களின் உடல் தேவைக்கு அதிகமான வளர்ச்சி மாற்றத்தை சந்திக்கிறது.

கொழுப்புகளின் இருக்கும் லெப்டின் என்ற ஹர்மோன் உருவாகி, மூளையில் தூண்டுதலை ஏற்படுத்தி சிறு வயதிலேயே பருவமடையும் சூழலை ஏற்படுத்துகிறது. பருவமடைதல் என்பது உடலில் நிகழும் திடீர் மந்திரத்தால் ஏற்படும் மாற்றங்கள் கிடையாது.

சிறுமியின் உடல் சுமார் 5 வருடங்கள் பருவமடைதலுக்கான வளர்ச்சி மாற்றங்களை படிப்படியாக நடத்தி, அவை இயற்கை முறையில் நடந்துவிட்டது என்பதை உறுதி செய்த பின்னர் பெண் பருவமடைகிறார்.

பெண்களை பொறுத்த வரையில் மார்பகத்தின் வளர்ச்சி, அந்தரங்க பகுதிகளில் உரோமங்கள் வளருதல், இனப்பெருக்க உறுப்புகளின் மேம்பாடு, உடலின் உயரம், திடீரென கூடுதல் அழகு போன்றவை பெண்கள் பருவமடையப்போகிறார்கள் என்பதை உணர்த்தும் அறிகுறிகள் ஆகும்.

சிறுமி எத்தனை வயதில் பருவமடைந்தாலும், அப்போதில் இருந்து சிறுமியின் இனப்பெருக்க உறுப்புக்கள் வளர்ச்சியை அடைந்துவிடுகிறது. பருவமடைந்த ஒரு அல்லது இரண்டு வருடத்திற்குள்ளாகவே, பாலின உறுப்புக்கள் முழு வளர்ச்சியை அடைகிறது.

சிறுமியின் உடலும், மனதும், எண்ணங்களும் குழப்பத்துடன் இருக்கும். இந்த குழப்பத்தை சிலர் தங்களுக்கு சாதகமாக உபயோகம் செய்யும் கொடூரம் 13 மற்றும் 14 வயதில் சிறுமிகள் கர்ப்பமாகும் அவலம் என்பதும் குறிப்பிடத்தக்கது.

சிறுமிக்கு எத்தனை வயதானாலும், அவளது உடல் எப்படியான வளர்ச்சியை பெற்று இருந்தாலும், பெற்றோர்கள் மட்டுமே பிள்ளைகளின் எண்ணங்களை புரிந்துகொள்வார்கள்.

தங்களின் பிள்ளைகளாக கருதுவார்கள் (சில விரும்பத்தக்க நிகழ்வுகளும் தந்தையால் நடந்துள்ளது என்பதை மறுக்க இயலாது). சிறுவயதில் அதிகளவு உடல் வளர்ச்சியை பெரும் சிறுமிகள், சமூகத்தின் பார்வையில் புரிதல் கொண்டவர்களால் எந்த பிரச்சனையும் இல்லை. மாற்றங்கருத்து கொண்டவர்கள் கண்டதையும் எண்ணுவார்கள். அதனை கண்டுகொள்ள தேவையில்லை.

அன்றைய காலங்களில் 15 வயதுகளில் பெண்கள் பருவமடைந்து வந்த நிலையில், இன்று 10 வயது இருக்கும் போதே பருவமடைய தொடங்குகிறார்கள்.

இந்த மாற்றத்தை சந்திக்கும் பெண்களின் ஆரோக்கியத்திற்கு பெரும் பின்விளைவு வரும் காலங்களில் ஏற்படலாம். சிறுவயதில் இருந்தே பிள்ளைகளை கவனித்துக்கொள்ளுதல் நல்லது. கண்ட உணவுகளையும் வாங்கிக்கொடுக்காமல், சத்தான உடல் ஆரோக்கியம் அளிக்கும் உணவுகளை வாங்கி கொடுக்கலாம் அல்லது இல்லத்தில் செய்து கொடுக்கலாம்.

இயற்கையான உணவுகளை சாப்பிட வைப்பது நல்லது. உடற்பயிற்சி, விளையாட்டு போன்றவற்றில் பெண் பிள்ளைகளை ஈடுபடுத்துவதால் அவர்களின் எதிர்காலம் அனைத்து வகையிலும் பாதுகாக்கப்படும்.

மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, கொழும்பு தமிழ் Android Mobile App இனை, இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.

சமூக ஊடகங்களில் கொழும்பு தமிழ்:

கொழும்பு தமிழ் ஃபேஸ்புக்
கொழும்பு தமிழ் ட்விட்டர்
கொழும்பு தமிழ் இன்ஸ்டாகிராம்
கொழும்பு தமிழ் டெலிகிராம்
கொழும்பு தமிழ் யு டியூப்

Get all the Latest Sir Lanka Tamil News and Tamil World News at Colombo Tamil. You can also catch all the latest Tamil Entertainment News by following us on Twitter and Facebook. also Download Our News App in Google Play Store.

தொடர்புச் செய்திகள்

ஆசிரியரிடமிருந்து மேலும் பதிவுகள்

மேலும் பதிவுகள்

பிந்திய செய்திகள்

x